கிளாடு பிரான்சுவா ஜெப்ராய்

(கிளாடு பிராங்காயிசு ஜெப்ராய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிளாடு பிரான்சுவா ஜெப்ராய் (Claude François Geoffroy, 1729 – 18 சூன் 1753) என்பவர் ஒரு பிரெஞ்சு வேதியியலாளர் ஆவார். இவர் 1753 ஆம் ஆண்டில் பிசுமத் என்ற வேதியியல் தனிமத்தைக் கண்டறிந்தார். அதுவரை பிசுமத்தைக் கொண்டுள்ள தாதுப்பொருட்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டாலும் அவை ஈயம் அல்லது வெள்ளீயம் தனிமங்களின் தாதுக்கள் என்றே அறியப்பட்டன. இவருடைய இப்பொருள் தொடர்பான கண்டுபிடிப்புக்கள் 1753 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.[1][2].

1748 ஆம் ஆண்டில் இவர் மருந்து வணிகர்களின் தலைவராக உயர்ந்தார். 1752 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வேதியியலாளராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1753 ஆம் ஆண்டு சூன் மாதம் இவர் காலமானார்[3]

இவருடைய தந்தையாரின் பெயரும் கிளாடு ஜோசப் ஜெப்ராய் என்பதால் இவர் கிளாடு ஜெப்ராய், இளையவர் என்றே அடையாளம் காணப்படுகிறார். தந்தையும் பிரெஞ்சு அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வேதியியலாளராகவும் மருத்துவம் செய்பவராகவும் பணியாற்றியவர்..

மேற்கோள்கள் தொகு

  1. Elementymology & Elements Multidict Bisemutum Bismuth, History & Etymology
  2. Google Books The Encyclopædia Britannica: The New Volumes
  3. Centenaire de l'Ecole supérieure de pharmacie de l'université de Paris: 1803 by Léon Guignard