கிளினோசோயிசைட்டு

கிளினோசோயிசைட்டு (Clinozoisite) என்பது Ca2Al3(Si2O7)(SiO4)O(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கிளினோசோயிசைட்டானது கால்சியம் அலுமினியம் சோரோசிலிக்கேட்டு கனிம அணைவுச் சேர்ம வகைக் கனிமம் ஆகும். தொடர்ச்சியான திண்மக்கரைசல் தொடராக இது உருவாகிறது. இதனுடன் அலுமினியத்தில் உள்ள இரும்பு(III) பதிலீடு செய்யப்பட்ட எபிடோட்டும் கலந்துள்ளது. அலுமினியம் எபிடோட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்[1].

கிளினோசோயிசைட்டு
Clinozoisite
கிளினோசோயிசைட்டு
பொதுவானாவை
வகைசோரோசிலிக்கேட்டுகள்
எபிடோட்டு குழு
வேதி வாய்பாடுCa2Al3(Si2O7)(SiO4)O(OH)
இனங்காணல்
நிறம்நிறமற்றது, பச்சை, சாம்பல், இளம்பச்சை, மஞ்சள் பச்சை
படிக இயல்புநீளமான பட்டகத்தன்மை படிகங்கள், வரிவரியான மணிகள், இழைகள்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்{100} இல் பொதுவற்ற மடிப்புநிலை
பிளப்பு{001} இல் சரிபிளவு
முறிவுசம்மற்றது/ஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்.
மோவின் அளவுகோல் வலிமை6-7
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்சாம்பல் வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி3.3 - 3.4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.706 - 1.724 nβ = 1.708 - 1.729 nγ = 1.712 - 1.735
இரட்டை ஒளிவிலகல்δ = 0.006 - 0.011
2V கோணம்14 முதல் 90° வரை அளக்கப்படுகிறது
மேற்கோள்கள்[1][2][3]

அலுமினியம் தளத்தில் மாங்கனீசு(III) பதிலீடு செய்யப்பட்டதால் தோன்றும் இளம் சிவப்பு சாயலுடன் கிளினோதுலைட்டு என்ற வகை கனிமம் உருவாகிறது[4]. ஆத்திரியாவின் கிழக்கு தைரோல் என்ற சிற்றூரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஒற்றைச் சாய்வு படிக அமைப்புடன் சோயிசைட்டு போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட்தால் இக்கனிமத்திற்கு கிளினோசோயிசைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது[1].

பாறைகளில் இக்கனிமம் தோன்றும்போது தாழ்ந்த முதல் நடுத்தரமான பிராந்திய உருமாற்றத்திற்கு உட்படுகிறது. உயர் கால்சியம் படிவுப்பாறைகளுடன் தொடர்பு உருமாற்றத்திலும் உள்ளது. பிளாகியோகிளேசு கனிமத்தின் திருத்தப்பட்ட வடிவமான சாசுரைட்டு கனிமத்தொகுப்பிலும் கிளினோசோயிசைட்டு தோன்றுகிறது[2].

கிளினோசோயிசைட்டும் பரகோனைட்டு கனிமமும் இணைந்து காணப்படுகின்றன என்று யேடெயிட்டைக் கொண்டுள்ள பைரோக்சென் கனிமங்களால் அறியமுடிகிறது. கீழ்கண்ட வினையின் மூலம் குவார்ட்சு மற்றும் நீரை விடுவிப்பதன் மூலம் இலாவ்சோனைட்டிலிருந்து இவை வருவிக்கப்படுகின்றன :[5]

4CaAl2Si2O8(H2O)2 + NaAlSi2O6 <=> 2Ca2Al3Si3O12(OH) + NaAl3Si3O10(OH)2 + SiO2 + 6H2O

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிளினோசோயிசைட்டு கனிமத்தை Czo[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Clinozoisite on Mindat.org
  2. 2.0 2.1 "Clinozoisite in the Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-01-12.
  3. Clinozoisite data on Webmineral
  4. Clinothulite on Mindat
  5. Deer, William A. (1997). Single-chain Silicates, Volume 2A. Geological Society of London. p. 477.
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளினோசோயிசைட்டு&oldid=3938023" இலிருந்து மீள்விக்கப்பட்டது