கிளி செத்துப்போச்சு
கிளி செத்துப்போச்சு ஒரு உல்லாச விளையாட்டு. நாட்டுப்புறங்களில் சிறுமியர் விளையாடுவர். 1950-க்குப் பின்னர் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன.
சிறுமியர் சிலர் இரு கால்களையும் நீட்டிக்கொண்டு வட்டமாக உட்காருவர். “அக்கக்கா கிளி செத்துப்போச்சு” – அனைவரும் சேர்ந்து பாடுவர். “எப்போது” – ஒருவர் தொடங்குவார். “இப்போது” –என்பார் அடுத்தவர். “எப்படி” – என்பார் அவருக்கு அடுத்தவர். “இப்படி” – என்று சொல்லிக்கொண்டு அவருக்கும் அடுத்தவர் தன் ஒருகாலை மடக்கிக் கொள்வார்.
மீண்டும் ஆட்டம் தொடங்கும் ஒற்றைக்கால் மிஞ்சும் வரை தொடரும். இறுதியாக எஞ்சியிருப்பவர் தோற்றவர்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை வெளியீடு, 1980