கிளீமெங்கோ சுழற்சி
வாயுக்களை குளிர்விக்க அல்லது நீர்மமாக்கப் பயன்படும் நுட்பம்
கிளீமெங்கோ சுழற்சி (Kleemenko cycle) என்பது வாயுக்களை குளிர்விக்க அல்லது நீர்மமாக்கப் பயன்படும் ஒற்றை-பிரவாக கலப்பு- குளிர்பதன நுட்பமாகும். இதை ஒற்றை- ஓட்ட பிரவாகச் சுழற்சி என்ற பெயராலும் அழைக்கலாம். குளிரூட்டும் செயல்முறையின் ஒரு சுழற்சியில் பல்லங்க குளிரூட்டிகள் பயன்படுத்தப்பட்டால் கிளீமெங்கோ சுழற்சி என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது [1]. உருசிய விஞ்ஞானி அலெக்சாண்டர் பெட்ரோவிச் கிளீமெங்கோ 1959 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கோபனேகனில் நடந்த 13 ஆவது பன்னாட்டு குளிர்பதன மாநாட்டின் செயல்முறைகளில் இந்த ஒற்றை- ஓட்ட பிரவாகச் சுழற்சியைக் குறித்து விவரித்தார். 1960 ஆம் ஆண்டு பெர்கமான் அச்சகம் வெளியிட்ட குளிர்பதன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் என்ற நூலின் முதலாவது தொகுதியில் 34-39 பக்கங்களில் இது வெளியிடப்பட்டது [2].
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History of cryogenics". Archived from the original on 2018-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
- ↑ Rectification column with two component closed heat exchange cycle