கிளென்னிசு பறார்

கிளென்னிசு ஆர். பறார் (Glennys R. Farrar) ஓர் அமெரிக்க இயற்பியல் பேராசிரியர். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் துகள் இயற்பியலிலும் அண்டவியலிலும் கரும்பொருண்ம ஆய்விலும் புலமை சான்றவர்.[1][2]

கிளென்னிசு பறார்
Glennys Farrar
துறைதுகள் இயற்பியல்
பணியிடங்கள்கால்டெக், உருட்கர்சு, நியூயார்க் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழ்கம், பெர்க்கேலி, பிரின்சுட்டன்

கல்வி

தொகு

இவர் தன் இளவல் பட்டத்தை 1968 இல் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 1971 இல் முனைவர் ஆய்வுக்கு பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிரின்சுட்டனில் இருந்து முதலில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி ஆனார்.[3][4][5]

வாழ்க்கைப்பணி

தொகு

கல்வி முடித்ததும் இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் உருட்கர்சு பல்கலைக்கழகத்திலும் புல உறுப்பினராகச் சேர்ந்தார் . பிறகு 1998 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[4] அங்கு இவர் இயற்பியல் துறையின் தளைவராக இருந்து, அண்டவியல், துகள் இயற்பியல் மையத்தை உருவாக்கினார்.[5]

இவர் அங்கே உயராய்வு நிறுவன உறுப்பினராகவும் ஆகியுள்ளார்.[6] இவர் 1975 இல் சுலோவான் ஆராய்ச்சி உறுப்பாண்மையும் நல்கையும் வழங்கப்பட்டார்.[7] இவர் 1984 இலும் 2014 இலும் குகன்கீம் ஆய்வுநல்கையைப் பெற்றுள்ளார். இவர் கோட்பட்டு இயற்பியல் சார்ந்த சீமோன்சு ஆய்வுநல்கைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. கிளென்னிசு பறார் publications indexed by Google Scholar
  2. Cartwright, Jon (2007-05-09). "Hunt for fifth force focuses on Bullet Cluster". Physics World. http://physicsworld.com/cws/article/news/2007/may/09/hunt-for-fifth-force-focuses-on-bullet-cluster. பார்த்த நாள்: 2019-04-28. 
  3. "Glennys Farrar". New York University. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  4. 4.0 4.1 "Henry Semat Lecture in Physics: Glennys R Farrar, Could Dark Matter be Made of Quarks?". City College of New York. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  5. 5.0 5.1 "Glennys Farrar". World Science Festival. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  6. "Glennys Farrar". Institute for Advanced Study. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  7. "Past Fellows". Alfred P. Sloan Foundation. Archived from the original on 2018-03-14. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  8. "Glennys R. Farrar". John Simon Guggenheim Foundation. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  9. "Simons Fellows in Theoretical Physics". Simons Foundation. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்னிசு_பறார்&oldid=3549906" இலிருந்து மீள்விக்கப்பட்டது