கிளேர் எலிசபெத் பார்னெல்
கிளேர் எலிசபெத் பார்னெல் (Clare Elizabeth Parnel) (பிறப்பு: 1970)[1]:{{{3}}} ஒரு பிரித்தானிய வானியற்பியலாளரும் பயனுறைக் கணிதவியலாளரும் ஆவார். இவர் சூரியக் கணிதவியலையும் மின்ம இயற்பியலில் சூரியத் தழலும் சூரியக் காந்தப்பாயும் காந்த மீளிணைவும் உள்ளிட்ட காந்தப் புலங்களையும் காந்தப் புலங்களின் இன்மைப் புள்ளிகளையும் ஆய்வு செய்கிறார். இவர் புனித ஆந்திரூவ்சு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் புனித ஆந்திரூவ்சின் ப்யன்முறைக் கணிதவியல் பிரிவின் மேனாள் தலைவரும் ஆவார்.
கல்வியும் வாழ்க்கைப்பணியும்
தொகுபார்னெல் எசெக்சில் பிறந்தார். இவர் இரிட்ஜ்வே பள்ளியிலும் சுவிண்டன் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.[1]:{{{3}}} குழந்தைப் பருவத்திலேயே இவருக்குக் கணிதப் பாடம் எளிதாக வந்துள்ளது. இவர் 1988 இல் வேல்சு பல்கலைக்கழக கார்திப் கல்லூரியில் சேர்ந்துள்ளார். முதலில் இவர் கணிதமும் வேதியியலும் கற்க சேர்ந்தாலும் ஒராண்டுக்குப் பிறகு கணிதம் மட்டுமே கற்க மாற்றம் பெற்றுள்ளார்.[2]:{{{3}}}
இவர் 1991 இல் தன் கணித இளவல் பட்டத்தை முதல் வகுப்பில் ஆனர்சு தகையுடன் கார்திப்பில் பெற்றுள்ளார். இவர் பிறகு முனைவ பட்ட மாணவகாக புனித ஆந்திரூவ்சு பல்கலைக்கழகத்ஹில் சேர்ந்தார். முனவர் பட்ட்த்தைக் கோட்பாட்டுச் சூரிய இயற்பியலில் 1994 இல் முடித்துள்ளார்.[2]:{{{3}}}[3]:{{{3}}}
இவர் புனித ஆந்திரூவ்சு பல்கலைக்கழகத்திலேயே முதுமுனைவர் மாணவராகத் தொடர்ந்தார். அந்த ஆய்வு முடிந்த பிறகு இவர் 1996 முதல் 1997 வரை ஆய்வாளராக இருந்து 2002 இல் விரிவுரையாளரானார். பின்னர் 2011 இல் பேராசிரியரானார். மேலும் இவர் புனித ஆந்திரூவ்சில் 2009 இலிருந்து 2013 வரை பயன்முறை இயற்பியல் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]:{{{3}}}
தகைமை
தொகுஇவர் 2016 இல் சூரியத் தழல் எப்படி சூட்டைகிறது என்பதை ஆய்வு மேற்கொண்டமைக்காக அரசு வானியல் கழகத்தின் வானியல், புவி இயற்பியலுக்கான தொடக்கச் சாதனைப் பவுலர் பரிசைப் பெற்றார்.[4]:{{{3}}} இவர் 2007 இல் சூரியவியல் ஆய்வுக்காக பிலிப் இலிவெர்குல்மே பரிசை வென்றுள்ளார்.[5]:{{{3}}}
சொந்த வாழ்க்கை
தொகுபார்னெல் துணிவான மலையேற்ற ஆர்வலர்,[1]:{{{3}}} இவர் மலைகள் அருகில் உள்ள வேல்சு பல்கலைக்கழகத்தைப் படிக்க தேர்ந்தெடுத்தார்.[2]:{{{3}}} அங்கு இவர் மூன்றாண்டுகள் முனைவர் பட்டம் படிக்கும்போது முன்றாவில் பெயரிட்டிருந்த 277 கொடுமுடிகளையும் ஏறியுள்ளார்.[2]:{{{3}}}[3]:{{{3}}} இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.[2]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Clare Parnell", SunBlock '99, UK Research and Innovation, archived from the original on 2019-09-05, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Six Questions with: Professor Clare Parnell", Women in Mathematics, Isaac Newton Institute for Mathematical Sciences, archived from the original on 2019-09-05, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04
- ↑ 3.0 3.1 3.2 Clare Parnell's Homepage, archived from the original on 2019-09-05, பார்க்கப்பட்ட நாள் 2019-09-04
- ↑ RAS Announces Geophysics Medal Winners for 2006, Royal Astronomical Society, 13 December 2005 – via SpaceRef
- ↑ "Young scientists win Philip Leverhulme Prizes", Astronomy & Geophysics, 49 (1): 1.04, February 2008, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1468-4004.2008.49104_2.x