கிளைத்த சங்கிலி கொழுப்பு அமிலம்

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

கிளைத்த சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (Branched-chain fatty acids ) என்பவை பொதுவாக கார்பன் சங்கிலியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெத்தில் கிளைகளைக் கொண்ட நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஆகும். பெரும்பாலும் பாக்டீரியாக்களில் இவை காணப்படுகின்றன.[1][2] ஆனால் நொதிக்கவைக்கப்பட்ட சோயா பீன்சால் ஆன நாட்டோ எனப்படும் பாரம்பரிய சப்பான் உணவு,[3] பால் பொருட்கள்,[4] மனிதக் குழந்தைகளின் பிண்டப்பூநீறு மற்றும் கலிபோர்னியா கடல் சிங்கங்களில் இவை காணப்படுகின்றன.[5] குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இவை பங்கு வகிக்கின்றன.[1] இலானோலின் என்ற விலங்கு மெழுகு பொருளிலும் கிளைத்த சங்கிலி கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.[2]

ஆட்டிறைச்சியின் வாசனைக்கு கிளைத்த சங்கிலி கொழுப்பு அமிலங்கள் காரணமாகக் கருதப்படுகின்றன.[6] மற்றும் அதிக உள்ளடக்கம் இருந்தால் நுகர்வோர் ஆட்டுக்குட்டி இறைச்சியின் வாசனையை விரும்பாமல் போகவும் காரணமாகிறது.[7] கிளைத்த சங்கிலி கொழுப்பு அமிலங்கள் கிளைத்த சங்கிலி கொழுப்பு அமில ஒருங்கிணைப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Branched chain fatty acids are constituents of the normal healthy newborn gastrointestinal tract". Pediatric Research 64 (6): 605–609. 2008. doi:10.1203/PDR.0b013e318184d2e6. பப்மெட்:18614964. 
  2. 2.0 2.1 Christie, William (June 26, 2012). "Branched-Chain". AOCS Lipid Library. American Oil Chemists' Society. Archived from the original on July 30, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  3. Wang, Dong Hao; Yang, Yupeng; Wang, Zhen; Lawrence, Peter; Worobo, Randy W.; Brenna, J. Thomas (2019). "High levels of branched chain fatty acids in nātto and other Asian fermented foods". Food Chemistry 286: 428–433. doi:10.1016/j.foodchem.2019.02.018. பப்மெட்:30827628. 
  4. Ran-Ressler, Rinat Rivka; Bae, Sangeun; Lawrence, Peter; Wang, Dong Hao; Thomas Brenna, J. (2014). "Branched-chain fatty acid content of foods and estimated intake in the USA". British Journal of Nutrition 112 (4): 565–572. doi:10.1017/S0007114514001081. பப்மெட்:24830474. 
  5. Wang, Dong Hao; Ran-Ressler, Rinat; St Leger, Judy; Nilson, Erika; Palmer, Lauren; Collins, Richard; Brenna, J. Thomas (2018). "Sea Lions Develop Human-like Vernix Caseosa Delivering Branched Fats and Squalene to the GI Tract". Scientific Reports 8 (1): 7478. doi:10.1038/s41598-018-25871-1. பப்மெட்:29748625. Bibcode: 2018NatSR...8.7478W. 
  6. Watkins PJ, Rose G, Salvatore L, Allen D, Tucman D, Warner RD (2010). "Age and nutrition influence the concentrations of three branched chain fatty acids in sheep fat from Australian abattoirs". Meat Sci 86 (3): 594–9. doi:10.1016/j.meatsci.2010.04.009. பப்மெட்:20696535. https://pubmed.ncbi.nlm.nih.gov/20696535. 
  7. Watkins PJ, Kearney G, Rose G, Allen D, Ball AJ, Pethick DW (2014). "Effect of branched-chain fatty acids, 3-methylindole and 4-methylphenol on consumer sensory scores of grilled lamb meat.". Meat Sci 96 (2 Pt B): 1088–94. doi:10.1016/j.meatsci.2012.08.011. பப்மெட்:22950976.