கிளைவ் மாளிகை

கிளைவ் மாளிகையின் முன்தோற்றம்

கிளைவ் மாளிகை (Clive House) என்பது சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடமாகும். இந்தக் கட்டடம் முன்னாளில் சேமியர் சுல்தான் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. இதனை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். கி.பி. 1753 இல் ஆர்க்காட்டு வீரர் எனப்பட்ட இராபர்ட் கிளைவ் இங்கு வசித்தார். அப்போது இக்கட்டடம் அட்மிரல் மாளிகை என அழைக்கப்பட்டது. பின் இது புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் நகர மாளிகையாக மாறியது. கி.பி. 1800 முதல் இதில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

  1. வி. கந்தசாமி (2011-மூன்றாம் பதிப்பு). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-008-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_மாளிகை&oldid=3359290" இருந்து மீள்விக்கப்பட்டது