கிள்ளாப் பறண்டி
கிள்ளாப் பறண்டி என்பது தாய்மார் குழந்தைகள் பலரோடு விளையாடி மகிழ்விக்கும் விளையாட்டு.
குழந்தைகள் தம் கைகளை விரித்துத் தரையில் வைத்துக்கொண்டு அமர்வர். தாய் ஒவ்வொருவர் கையிலும் கிள்ளாமல் கிள்ளி மென்மையாகப் பறாண்டுவார். இதனால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது.
- கிள்ளாக் கிள்ளாப் பறாண்டி
- கீச்சு மூச்சுப் பறாண்டி
- உங்க அப்பன் பேரு என்ன
என்று பாடிக்கொண்டே கிள்ளுவாள். குழந்தை
- முருங்கைப்பூ
என்று ஏதோ ஒரு பூவின் பெயரைச் சொல்லும். (பின் அடுத்தடுத்த குழந்தைகள் பூவின் பெயரையே சொல்லவேண்டும்)
முதல் குழந்தை காயின் பெயரையோ, பழத்தின் பெயரையோ சொன்னால் பிற குழந்தைகளும் அந்த இனப் பொருளில் வேறொரு பெயரைச் சொல்ல வேண்டும்.
- முருங்கைப் பூவைத் தின்றவரை
- முடிச்சுப்போட்டு வச்சுக்கோ
என்று சொல்லி, அக்குழந்தையின் கையில் ஒரு சிறு மணியாங்கல்லைத் தருவார். அந்தக் குழந்தை பிறருக்குத் தெரியாமல் வாங்கித் தன் இரு கைகளால் பொத்தி அடி வயிற்றில் வைத்துக்கொள்ளும். தாச்சி எதனையும் கொடுக்காவிட்டாலும் பெற்றது போல் நடித்துக்கொண்டு வைத்துக்கொள்ளும்.
தாய்ச்சி பாட்டுப் பாடும்போது ஒவ்வொரு அடிக்கும் அட்டுத்தடுத்து உள்ளவரின் கையில் பறாண்டுவதால் கல் கொடுக்கப்பட்டவரோ கொடுக்கப்படாதவரோ போகக் கடைசியில் எஞ்சுபவர் யார் கையில் கல் உள்ளது எனச்சொல்லவேண்டும். சொல்லிவிட்டால் அவர் பழம். அவர் விலகிக் கொள்ளலாம். எஞ்சியவரிடம் விளையாட்டு நிகழும்.
இலங்கையில் வழக்கத்திலுள்ள பாடல்
தொகுகிள்ளி நுள்ளிப் பிராண்டி
கீயா மாயப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ
- இதற்கு முருக்கம் பூ எனப் பதில் கூறப்படும்
முருக்கம் பூவை திண்டவனே
முள்ளந்தண்ணியைக் குடிச்சவனே
பாவட்டம் கையை மடக்கு
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980