கிழக்கு கடற்கரைச் சமவெளிகள்
கிழக்கு கடற்கரை சமவெளிகள் (Eastern Coastal Plains) கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையே உள்ள பரந்த நிலப்பரப்பின் நீட்சியைக் குறிக்கிறது. மேற்கு கடற்கரைச் சமவெளிகளைக் காட்டிலும் அகன்றும், சமபரப்பும் கொண்டு கிழக்கு கடற்கரை சமவெளி காணப்படுகிறது. இச்சமவெளியின் நீட்சி தமிழ்நாட்டிலிருந்து தெற்காக மேற்கு வங்காளம் வரையும், வடக்கில், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா வழியாகவும் அகன்றுள்ளது. கிழக்கு கடற்கரைச் சமவெளியில் சில்கா ஏரி என்ற ஓர் உவர்நீர் ஏரி அமைந்துள்ளது. ஒடிசாவில் அமைந்துள்ள இவ்வேரி மகாநதி வடிநிலத்தின் தெற்கு பகுதியில் ஒரு நீட்சியாக அமைந்துள்ளது.
பல இந்திய ஆறுகளின் வடிநிலங்கள் ஒன்றாகச் சேர்ந்து இச்சமவெளியின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மகாநதி, கோதாவரி, காவிரி, கிருட்டிணா ஆறுகள் இச்சமவெளியில் நீரைப் பெறுகின்றன. வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை இரண்டும் கிழக்குக் கடற்கரைச் சம்வெளிக்கு மழையைக் கொடுக்கின்றன. 1000 மில்லிமீட்டர் முதல் 3000 மில்லிமீட்டர் வரையிலான ஆண்டு மழையளவு இச்சம்வெளியில் பதிவாகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் அகலம் 100 கிலோமீட்டர் முதல் 130 கிலோமீட்டர் வரைக்கும் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது [1].
மகாநதிக்கும் கிருட்டிணா ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி வடக்கு சர்க்கார் என்றும், கிருட்டிணா ஆற்றுக்கும் காவிரி ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கொரமண்டல் கடற்கரை என்றும் உள்ளூரில் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sr.Bimcy; Sr.Sisily; Charlotte. Bibliographic information. Scholar Publishing House. pp. 20–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8171725163.