கிழவி விளையாட்டு

கிழவி விளையாட்டு என்பது சிறுவர் சிறுமியரோடு கிழவி ஒருத்தி உரையாடுவது போன்ற ஒரு நடிப்பு-விளையாட்டு. சிறுமியரில் ஒருவர் கிழவி போல் தடி ஊன்றிக்கொண்டு நடிப்பார். இவர்களுக்கு இடையே உரையாட்டு நிகழும்.

கிழவி நடிப்பு
சிறுவர் சிறுமியர் சேர்ந்திசை கிழவி
கிழவி கிழவி எங்கே போறே காட்டுக்குப் போறேன்
நாங்களும் வரட்டுமா முள்ளு குத்தும்
பரவாயில்லை வருகிறோம் சன்னலிலே பால் இருக்கு. பாத்துக்குங்கோ
ஆகட்டும் பாட்டி - - -

(சற்று தூரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து)

கிழவி சிறுவர் சிறுமியர் சேர்ந்திசை
பால் எங்கே பூனை தட்டிக் குடிச்சிட்டுது

கிழவி தடியை உயர்த்திக்கொண்டு அவர்களை அடிக்கச் செல்வது போலவும், சிறுவர் சிறுமியர் அடி படாமல் ஓடுவது போலவும் நடிப்பர். பின் வேறொருவர் கிழவியாக மாறி ஆட்டம் தொடரும். மூத்தோர் சொல்லைப் பினபற்ற வேண்டும் என்று நீதி புகட்டும் விளையாட்டு.

மேலும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழவி_விளையாட்டு&oldid=1037723" இலிருந்து மீள்விக்கப்பட்டது