கிழார்
கிழார், கிழான் என்னும் சொற்கள் உரிமை பூண்டவரைக் குறிக்கும். பெண் ஒருத்திக்கு உரிமை பூண்டவனை அகத்திணை இலக்கணம் ‘கிழவன்’, ‘கிழவோன்’ என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன. நிலத்துக்கு உரியவனைத் திருக்குறள் கிழவன் எனக் குறிப்பிடுகிறது. [1]
இந்தக் கிழார் என்னும் உரிமைப்பெயர் ஊரின் பெயரோடு புணரும்போது எல்லா இடங்களிலும் இனவொற்று மிகாமல் புணர்ந்துள்ளது. எனவே ஊரின் பெயர் ஊரிருள்ள மக்களைக் குறிக்கும் உயர்திணைப் பெயர் எனத் தெரியவருகிறது. [2] இந்த வகையில் அரிசில் கிழார் என்றால் அரிசில் என்னும் ஊரில் வாழும் மக்களுக்கு உரியவர் எனப் பொருள்படும். இது இவருக்கு மக்கள் வழங்கிய விருது.
அரசன் ஓர் ஊரின் நிலம் முழுவதையும் வழங்கி, இறையிலியாக அதனை கிழார் பெருமகனாருக்கு உரிமையாக்கியதால் ‘கிழார்’ எனச் சிறப்பிக்கப்பட்டார் எனக் கொள்வாரும் உளர். ஆயின், இது அரசனால் வழங்கப்பட்ட விருது. செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு ஊர் வழங்கியதை எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சிக்குக் கொள்ளலாம்.
கிழார் விருது பெற்ற புலவர்கள்
தொகு- அரிசில் கிழார்
- ஆலத்தூர் கிழார்
- ஆவூர் கிழார்
- ஆவூர் கிழார் (நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்)
- ஆவூர் மூலங்கிழார்
- இடைக்குன்றூர் கிழார்
- உகாய்குடி கிழார்
- ஐயூர் மூலங்கிழார்
- கயத்தூர் கிழார்
- கருவூர் கிழார்
- காரி கிழார்
- கிளிமங்கலம் கிழார்
- குறுங்கோழியூர் கிழார்
- கூடலூர் கிழார்
- கோவூர் கிழார்
- நல்லாவூர் கிழார்
- நொச்சிநியமங் கிழார்
- பெருங்குன்றார் கிழார்
- பொதும்பில் கிழார்
- மருங்கூர் கிழார்
- மாடலூர் கிழார்
புலவரின் தந்தை
- ஆர்க்காடு கிழார் (புலவரின் தந்தை)
- உமட்டூர் கிழார் (புலவரின் தந்தை)
- கோளியூர் கிழார் (புலவரின் தந்தை)
இலங்கை
- கரவைக்கிழார் (இலங்கை)
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்