கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா நகரத்தில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பாதி மனித உருவம் கொண்ட ஒரு பெரிய ஸ்பிங்ஸ் சிலையாகும். இது உலகில் உள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகும். இது பண்டைய எகிப்தியர்களால் கி.மு. மூன்றாம் ஆயிரமாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ், எகிப்து

நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தச் சிலையின் முழு உருவமே வெளியே தெரிய வந்தது. அதற்கு முன்பு வெறும் தலை மட்டுமே வெளியே தெரிய, உடல் பாகம் மணலால் மூடப்பட்டிருந்தது. இந்த ஸ்பிங்ஸ் சிலை உண்மையில், தாடியுடன் இருந்தது. அந்தத் தாடி சிதலம் அடைந்தது. அப்படி சிதைந்து விட்ட தாடியின் பகுதிகள் கெய்ரோ அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், சிலையின் கால் பகுதிகள் மற்றும் விரங்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டன.

கிரேக்கத் தொன்மைக் கதைகளில் சிங்க உருவமும் மனிதப் பெண்ணின் தலையும் கொண்டு மிருகத்துக்கு "ஸ்பிங்ஸ்' என்று பெயர். இந்தக் கிரேக்கக் கதைகளில் ஸ்பிங்ஸ் மிருகம் கேட்கும் புதிர்களுக்குப் பதில் சொல்லாவிட்டால், அது அவர்களை விழுங்கி விடுமாம். எகிப்தில் ஸ்பிங்ஸ் சிலைகளில் ஆண் தலையாக வடிவமைக்கப்பட்டு, இருக்கும். அரசர்களின் கல்லறைகள், கோயில்கள் போன்றவற்றிற்குப் பாதுகாப்பாகவே, இந்த ஸ்பிங்ஸ் சிலைகளை எகிப்தியர்கள் அமைத்திருந்தனர்.

எகிப்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது, இதன் பெயர் என்னவென்று தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்தில் பல்ஹிப், பில்ஹா, சுழல் ஹோல் ஹோர் எம் அக்ட் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறது. எகிப்து அரசாங்கத்தின் ஆவணங்கள், தபால் தலைகள், காசுகள் போன்றவற்றில் உட்புற சிலையில் உருவம் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. www.puthiyaseithi.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசாவின்_பெரிய_ஸ்பிங்ஸ்&oldid=3612806" இலிருந்து மீள்விக்கப்பட்டது