கீச்சிரோ டொயோடா
சூன் 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். |
கீச்சிரோ டொயோடா (Kiichiro Toyoda, சூன் 11, 1894 – மார்ச் 27, 1952}} என்பவர் சப்பானியத் தொழிலதிபர் ஆவார். இவர் தனது குடும்ப நிறுவனமான டொயோடா விசைத்தறி நிறுவனத்தை மாற்றி டொயோட்டா நிறுவனத்தை நிறுவியவர்.
கீச்சிரோ டொயோடா Kiichiro Toyoda | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 11, 1894 சிசுவோக்கா, சப்பான் |
இறப்பு | மார்ச்சு 27, 1952 டொயோட்டா, யப்பான் | (அகவை 57)
பணி | டொயோட்டா நிறுவனர் |
பிள்ளைகள் | சொய்ச்சீரோ டொயோடா |
டொயோட்டா நிறுவனம்தொகு
குடும்ப வறுமை காரணமாக, சிச்சிரோ டொயோடாவின் தந்தை ஸாகிச்சி டொயோடாவால் ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆகவே மகன் சிச்சிரோ டொயோடாவை பிரபல டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி படிக்க வைத்தார். பின், சிச்சிரோ டொயோடா அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் சென்று தொழில் நுட்பம் சார்ந்த பயிற்களை எடுத்துக்கொண்டார். பயிற்சிக்குப் பின், விசைத்தறிகள் தயாரிக்கும் தன் குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார். குடும்ப நிறுவனதை நடத்திக்கொண்டே கார் தயாரிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டார். அப்பா ஸாகிச்சி டொயோடாவும் மகனின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டினார். ஸாகிச்சி டொயோடா 1930 ல் மரணம் அடைந்தார். அவர் இறந்து நான்கே வருடங்களில் முதல் காரை சிச்சிரோ டொயோடா உருவாக்கினார். முதல் ஆண்டில் 20 கார்கள் மட்டுமே டொயோட்டா நிறுவனத்தால் தாயாரிக்கப்பட்டது. இப்பொழுது 2016 இல் டொயோட்டா நிறுவனம் 9940000 கார்களை உற்பத்தி செய்து, கார் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
டொயோட்டா - பெயர் உருவாக்கம்தொகு
நிறுவனப் பெயர் உருவாக்கத்திற்காக, வாடிக்கையாளர்களிடையே ஆலோசனை கேட்டு ஒரு போட்டி நடத்தினார் சிச்சிரோ டொயோடா. அப்படி உருவானதே டொயோட்டா என்ற பெயர். தனது குடும்பப் பெயரில் இருந்தே இப்பெயரை வடிவமைத்தார் சிச்சிரோ டொயோடா.
மேற்கோள்தொகு
- இந்து தமிழ் நாழிதள், மே 9, 2017 பக்கம் 14
- http://www.nndb.com/people/433/000173911/ பார்த்த நாள் 21.5.17
- http://info-biography.blogspot.in/2010/03/born-february-14-1867-18670214-in-japan.html பார்த்த நாள் 21.5.17