கீதம் அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் மிகவும் எளிதானது. கீதங்கள் ஒரே காலத்தில் அமைந்திருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசங்கள் கீதங்களில் இல்லை. சங்கதிகளும் கடினமான வக்ர பிரயோகங்களும் வராது சுலபமான நடையிலே அமைந்திருக்கும். கீதத்தில் அமைந்திருக்கும் பொருளற்ற அ, ஐ, ய, இய, திய்ய, வாஇய முதலிய சொற்கள் கீதாலங்கார சொற்கள் என்றும் மாத்ருகா பதங்கள் என்றும் சொல்லப்படும். சங்கீத அப்பியாச முறைகளில் அலங்காரத்திற்குப் பின்னர் கீதங்கள் கற்பிக்கப்படும். கீதங்கள் 2 வகைப்படும்.

  1. சஞ்சாரி கீதம்.
  2. இலட்சண கீதம்.

சஞ்சாரி கீதம்

தொகு

சஞ்சாரி கீதமானது இராகத்தின் களையைத் தெளிவாக உணர்த்தும். இதன் சாகித்தியம் தெய்வத்துதியாகவும் பல புதுப்புதுக் கருத்துக்களை உணர்த்தும் சாகித்தியங்களைக் கொண்டு அமைந்திருக்கும். சில கீதங்கள் பெரியோரைப் புகழ்வதாக அமைந்திருக்கும். இதற்கு அங்க வித்தியாசங்கள் இல்லை. இதனைச் சாமானிய கீதம் என்றும், சாதாரண கீதம் என்றும், லஷிய கீதம் என்றும் அழைப்பர்.

  • உ+ம்:

கணாநாத :மாயாமாளவகௌளை.

வரவீணாம் :மோகனம்.

  • சஞ்சாரி கீதம் இயற்றியோர்: புரந்தரதாசர், இராமாத்யர்.

இலட்சண கீதம்

தொகு

இக்கீதம் தெய்யவத்அதாவது அதன் ஆரோகணம், அவரோகணம், அன்னிய ஸ்வரம், கான காலம் (பாடும் நேரம்), ரசம் போன்றவற்றைக் கொண்டிருக்கும். துதியாக இல்லாது எந்த இராகத்தில் இயற்றப்பட்டுள்ளதோ அவ்விராகத்தின் இலட்சணத்தை சாகித்தியத்தில் விளக்கியிருக்கும். இலட்சண கீதம்,

  1. இராகாங்க ராக இலட்சண கீதம்
  2. ஜன்னிய இராக இலட்சண கீதம்

என இரு வகைப்படும். ராகாங்க ராக இலட்சண கீதங்களில் அங்க வித்தியாசங்கள் உண்டு. அவையாவன:

  1. சூத்திர காண்டம்
  2. உபாங்க காண்டம்
  3. பாஷாங்க காண்டம்.

இக்கீதங்களின் உதவியால் இராகங்களின் லட்சணத்தை அறியலாம்.

  • உ+ம்:

ஆரபிப்பண்ணின் :ஆரபி.

முகாரி ராகம் :முகாரி.

  • இலட்சண கீதம் இயற்றியோர்: வெங்கடமகி, கோவிந்த தீட்ஷிதர், பைடாலகுருமூர்த்தி சாஸ்திரிகள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதம்&oldid=4143659" இலிருந்து மீள்விக்கப்பட்டது