கீதாபா ஜடேஜா
கீதாபா ஜெய்ராஜ்சிங் ஜடேஜா (Geetaba Jayrajsinh Jadeja) (பிறப்பு 1968) குசராத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2022 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[2]
இளமை
தொகுஜடேஜா குசராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டலைச் சேர்ந்தவர். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெய்ராஜ்சிங் ஜடேஜாவின் மனைவி ஆவார். இவர் கொண்டலில் உள்ள மோந்திபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து 1985 =ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார்.[1]
அரசியல்
தொகு2022 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொண்டல் சட்டமன்றத் தொகுதியில் ஜடேஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 86,062 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சியின் சிவ்லால் பராசியாவை 78,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] இவர் முதலில் 2017 குசராத்து சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் கதாரியா அர்ஜுன்பாய் கன்ஷ்யம்பாயை 15,397 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Geetaba Jayrajsinh Jadeja(Bharatiya Janata Party(BJP)):Constituency- GONDAL(RAJKOT) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-12-20. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name ":0" defined multiple times with different content - ↑ "Gondal Election Result 2022 LIVE: BJP's Geetaba Jayrajsinh Jadeja retains Gondal seat - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2022-12-07. பார்க்கப்பட்ட நாள் 2024-12-20.
- ↑ Live, A. B. P. (2022-12-08). "Gondal Election 2022 Final Results LIVE: BJP Candidate GEETABA JAYRAJSINH JADEJA wins from Gondal , Details Inside". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-20.
- ↑ "Gondal Election Result 2022 LIVE Updates: Geetaba Jayrajsinh Jadeja Of BJP Wins". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-20.