கீதா குரு-மூர்த்தி
கீதா குரு-மூர்த்தி ஆங்கில மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர், செய்தி வாசிப்பாளர், செய்தியாளர் ஆவார். இவர் பிபிசியில் 2013 ஆம் ஆண்டு முதல், பிபிசி நியூஸ் அட் நைன் எனும் நிகழ்ச்சியின் வழங்குனராகவும், பிபிசி உலகச் செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசை, பிபிசி 2 தொலைக்காட்சி அலைவரிசை, பிபிசி செய்தி அலைவரிசை ஆகியவற்றில் செய்தி வழங்குனராகவும் பணியாற்றிவர்.
ஆரம்ப கால வாழ்க்கையும், பணியும்
தொகுகீதா லிவர்பூலில் பிறந்து, லங்கசையர் கவுண்டியிலுள்ள மேற்கு பிரட்போர்டு எனும் சிற்றூரில் வளர்ந்தார். இவரின் தந்தை ஒரு ஊடுகதிரியலாளராக பர்ன்லே, பிளாக்பர்ன் ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.[1][2] இசைக் குழுக்களில் உறுப்பினராகவும், நாடகங்களில் பங்குபெறுபவராகவும், பாடல் குழு உறுப்பினராகவும் இருந்தார் கீதா. பின்னர், உயிர்வேதியியல் படித்துவிட்டு தனது பணிகளை மாற்றினார்.[1]
பிபிசியின் உள்ளூர் செய்தி நிகழ்ச்சியான பிபிசி லுக் நார்த் (யார்க்சையர் மற்றும் நார்த் மிட்லேண்ட்ஸ்) எனும் நிகழ்ச்சியின் செய்தியாளராகப் பணியாற்றினார். அதன்பிறகு சேனல் 5 எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரிந்தார்.[3][4] 2002 ஆம் ஆண்டில் பிபிசியின் ஏசியா டுடே, பிபிசி பிரேக்பாஸ்ட் ஆகிய நிகழ்ச்சிகளின் வழங்குனராகவும், பிபிசி வேர்ல்டு, பிபிசி நியூஸ் 24 ஆகிய அலைவரிசைகளில் செய்தி வழங்குனராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் பிபிசி ரேடியோ 4 வானொலியில் செய்தி வழங்குனராக பணியாற்றினார்.[1][5] கீதா 2002 ஆம் ஆண்டில் வேக்கிங் தி டெட் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தார்.
ஆண்-பெண் இருவருக்கிடையே நிலவும் ஊதிய வேறுபாட்டுக்கு எதிராக பிபிசியின் பெண் ஊழியர்கள் பரப்புரையில் ஈடுபட்டபோது, கீதாவும் பங்களித்தார்.[6]
02 பிப்ரவரி 2023 அன்று பிபிசி தனது செய்தி அலைவரிசையில் செய்த மாற்றங்களின்போது, 10 செய்தி வழங்குனர்கள் தமது பணியை இழந்தனர். இவர்களுள் கீதாவும் ஒருவராவார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபிலிப் கொலின்ஸ் எனும் இதழியலாளரை 2002 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் கீதா குருமூர்த்தி திருமணம் செய்தார்.[1][8] கீதாவின் இளைய தமையன் கிருஷ்ணன் குரு-மூர்த்தி என்பவர், சேனல் 4 நியூஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றுகிறார்.[5][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Walia, Nona (9 June 2002). "The World according to …". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/The-world-according-to-/articleshow/12368717.cms. "in the newsroom on September 11, that event was a turning point, Born in Liverpool, UK, … grew up in Lancashire. … a lot of theatre, played for orchestras and sang in choirs. … studied biochemistry, but changed … , … married … India on honeymoon,"
- ↑ Graham, Natalie (5 January 2003). "Fame & Fortune: TV newsman reports to his mother". https://www.thetimes.co.uk/article/fame-and-fortune-tv-newsman-reports-to-his-mother-zjpfx5626g7. "grew up with his sister, Geeta, and brother, Ravi, in Lancashire."
- ↑ krishgm (5 February 2019). "Yes then she became a correspondent for Five News then BBC News" (Tweet).
- ↑ Sissons, Helen (2006). Waiting to Broadcast. Media, Communication and Culture Series. SAGE Publishing. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761949268.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ 5.0 5.1 Mendick, Robert (13 May 2005). "Go on, teach the f***er a lesson". Evening Standard (London). https://www.standard.co.uk/showbiz/go-on-teach-the-fer-a-lesson-7261017.html. "Speech writer and strategy adviser Philip Collins, 36, … married to a rising star of BBC news … Geeta Guru-Murthy, who presents news bulletins on BBC World, BBC News 24 and on Radio 4, and is the sister of Krishnan Guru-Murthy, … The couple have one child."
- ↑ Press Association (22 July 2017). "Female BBC stars urge corporation to 'act now' on pay and gender". The Guardian. https://www.theguardian.com/media/2017/jul/22/female-bbc-top-talent-urge-corporation-to-act-now-on-pay-and-gender.
- ↑ "BBC Cuts 10 Top Presenter Jobs Ahead Of News Channel Merger". Deadline Hollywood. 2 February 2023. Archived from the original on 27 July 2023.
- ↑ Collins, Philip James. Who's Who (UK). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ww/9780199540884.013.U10000037. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-954088-4. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
m 2002, Geeta Guru-Murthy
- ↑ Greenstreet, Rosanna (7 July 2001). "My childhood home: Krishnan Guru-Murthy". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/finance/property/3290606/My-childhood-home-Krishnan-Guru-Murthy.html. "village called West Bradford, just outside Clitheroe in Lancashire. In 1974, … detached house on a new housing estate … me and my older sister, Geeta; and when I was seven, my little brother Ravi arrived. Dad's a doctor and was a consultant radiologist in Blackburn and Burnley, both about 12 miles away."