கீரங்கீரனார்
கீரங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கீரம் என்னும் ஊரில் வாழ்ந்த கீரனார் இவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது நற்றிணை 78 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
தொகு- நெய்தல் திணை
தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
இடம்; வாள்போல் இருக்கும் கழிமுகம். அதில் சுறா மேய்மிறது. அதில் பூத்திருக்கும் நீல நிற நெய்தல் பூவின்மேல் புன்னைப் பூக்களின் மகரந்தத் தாதுகள் உதிர்கின்றன. அருகில் தாழம்பூ பூத்திருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம்.
இங்கே அவர் இல்லையே என்று நாம் துன்றுகிறோம். அதோ கேள்! அவர் திருமணம் சொய்துகொள்ள வரும் தோரின் மணியோசை கேட்கிறது.
அவரது தேரோட்டி குதிரையைத் தார்க்கோல் செய்யாமல் மெதுவாக ஓட்டிவருகிறான். (நாம் பதறிக்கொண்டிருக்கிறோம்)