கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

திருவிளையாடற் புராணத்தில் 54 வது படலமாக கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் உள்ளது. இப்படலத்தில் சிவன் நக்கீரருக்கு இலக்கணம் கற்பித்த வரலாறு கூறப்பட்டுள்ளது.

திருவிளையாடல்தொகு

சங்கத்துப் புலவர் கூட்டத்திலே நக்கீரர் சிவபெருமான் மீது நீங்காத பக்தி கொண்டவர். தினமும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரப்பெருமானை வழிபடும் கடமை கொண்டவர். சிவபெருமான் நக்கீரர் மீது கொண்ட அன்பின் காரணமாக அகத்திய முனிவரை அழைத்து நக்கீரருக்கு இலக்கணம் கற்பிக்குமாறு ஆணையிட்டார். அகத்திய முனிவரும் முதல் நூலை தொகை, வகை, விரி முறையினாலே காண்டிகை உரையினாலும், விருத்தி உரையினாலும் ஐயம் திரிபறக் கற்பித்தார். நக்கீரரும் தாம் கற்றவற்றை மற்றப் புலவர்களுக்கும் ஓதி இறைவனிடத்தில் நீங்காத அன்பு பூண்டார். [1]

ஆதாரங்கள்தொகு

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2194