கீரெசு தற்காப்பு

1. d4 e6 2. c4 Bb4+ என்ற நகர்வுகளுடன் தொடங்கும் சதுரங்கத் திறப்பு

கீரெசு தற்காப்பு (Keres Defence) கீழ்கண்ட நகர்வுகளுடன் தொடங்கும் ஒரு சதுரங்கத் திறப்பு ஆட்டமாகும். இதை கங்காரு திறப்பு அல்லது பிராங்கோ-இந்தியன் தற்காப்பு என்ற பெயர்களாலும் அழைப்பர்.

கீரெசு தற்காப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
e6 black pawn
b4 black bishop
c4 white pawn
d4 white pawn
a2 white pawn
b2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் ஏ40
Chessgames.com opening explorer
1. d4 e6
2. c4 Bb4+

எசுத்தோனிய கிராண்டு மாசுட்டர் பால் கீரெசு பெயரால் இச்சதுரங்கத் திரப்பு அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

1851 ஆம் ஆண்டு இலண்டனில் யோகான் லோவெந்தால் மற்றும் என்றி தாமசு பக்கிள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற போட்டியின் 4 ஆவது ஆட்ட்த்தில் இத்திறப்பு ஆடப்பட்டது[1][2]. தற்போது இத்திறப்பிற்கான செந்தர நகர்வாக 3.Bd2 என்று ஆடலாம் என ஓவார்டு சிடௌண்டன் பரிந்துரைக்கிறார்.

விவாதம்

தொகு

3.Nc3, 3.Nd2, அல்லது 3.Bd2 என்று வெள்ளையால் விளையாட முடியும். பெரும்பாலும் ஆட்டம் நிம்சோ-இந்தியன் தற்காப்பு, டச்சு தற்காப்பு, ராணியின் பலி மறுப்பாட்டம், ஆங்கிலத் தற்காப்பு அல்லது போகோ-இந்தியன் தற்காப்பு போன்ற திறப்பாட்டங்களுக்கு நிலை மாறலாம். 3.Nc3 என நகர்த்தினால் மேற்கூறப்பட்ட திறப்புகளில் ஒன்றை நோக்கி ஆட்டம் செல்லலாம். 3...Nf6 என்றால் அது (நிம்சோ-இந்தியன்) என்றும், 3...f5 [3] என்றால் (டச்சு; பக்கள் 3...Bxc3+ 4.bxc3 f5! என விளையாடலாம் என்கிறார் கோர்ன் 3...d5 என்ற நகர்வு (வழக்கமான ராணியின் பலி மறுப்பாட்டம்),அல்லது 3...b6 (ஆங்கிலத் திறப்பு). 3.Nd2 என ஆடினால் கருப்புக்கு ஆடுவதற்கு 3...Nf6 4.Nf3 என்ற போகோ இந்தியன் தற்காப்பைத் தவிர ஒரே சாத்தியம் தான்.

3.Bd2 நகர்த்தலுக்குப் பின்னர் 3...Bxd2+ என நகர்த்தி கருப்பு ஆட்டத்தைப் போகோ-இந்திய வரிசையில் தொடர முடியும். 3...a5 என்று விளையாடினாலும் வெள்ளை Nf3 என ஆடுமாயின் ஆட்டம் போகோ-இந்திய வரிசைக்கே நிலைமாறும். அல்லது வெள்ளையை e4 நகர்த்தலுக்கும் அனுமதிக்கலாம். 3...Qe7 4.e4 d5 (1995 இல் சான் லூயிசு போட்டியில் லியனோசு எதிர் ஆப்மான் ஆட்ட்த்தில் கருப்புக்கு நல்ல ஆட்டம் கிடைத்தது 4...Nf6 5.a3 Bxd2+ 6.Nxd2 d6 7.Bd3 e5 8.d5 0-0) [4] 5.Bxb4 (5.e5 , 1985 இல் டிம்மான் எதிர் சிப்ராகெட்டு ஆட்டம்) [5][6] Qxb4+ 6.Qd2! Qxd2+ (ஒருவேளை 6...Nc6 என்றால் பின்னர் 7.Nc3!) 7.Nxd2 வெள்ளைக்கு நேராக அனுகூலம் கிடைக்கும்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Hooper, Whyld (1987)
  2. Löwenthal vs. Buckle, London 1851 Chessgames.com
  3. Korn, Walter (1982). "Queen's Pawn Games". Modern Chess Openings (12th ed.). David McKay Company, Inc. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-13500-6.
  4. Schiller (1998), p. 227
  5. Timman vs. Spraggett, Montpellier 1985 Chessgames.com
  6. Matanović 1996 (Vol A), p. 295, note 73
  7. Kasparov, Gary; Keene, Raymond (1982). Batsford Chess Openings. American Chess Promotions. p. 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-2112-6.

நூற்பட்டியல்

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரெசு_தற்காப்பு&oldid=3849401" இலிருந்து மீள்விக்கப்பட்டது