கீற்றோப்ரோபென்

கீற்றோப்ரோபென் (Ketoprofen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக நரம்பு வலி, காய்ச்சல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Actron, Orudis, Lupiflex, Oruvail போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]

கீற்றோப்ரோபென்
வேறு வணிகப் பெயர்கள்
Ketorin, Keto, Ketomex, Profénid, Bi-Profénid,Ketodol, Fastum Gel, Lasonil, Orudis, Actron, Rhofenid.

மருத்துவப் பயன்பாடு தொகு

பொதுவாக பலவகை மூட்டழற்சியால் ஏற்படும் வலி, பல்வலி போன்ற நோய்களுக்கு கீற்றோப்ரோபென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர களிம்பு, திரவம், தெளிப்பு, அல்லது ஜெல் போன்றவடிவங்களில் தசைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான வலிகள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

பக்க விளைவுகள் தொகு

இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் சிறுநீரகப்பாதிப்பு, குடற்புண், மலச்சிக்கல் ஆகும். இவற்றைத்தவிர ஒவ்வாமை பக்க விளைவுகளும் கீற்றோப்ரோபென் பயன்பட்டால் ஏற்படும்.

பயன்பாட்டெதிர் நிலைகள் தொகு

இம்மருந்து குடற்புண், ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-09. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
  2. http://www.rxlist.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீற்றோப்ரோபென்&oldid=3550254" இலிருந்து மீள்விக்கப்பட்டது