கீழ்நோக்கு நாள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கீழ் நோக்கு நாள் என்பது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்றாகும். நிலநடுக்கோட்டிலிருந்து ஞாயிற்றின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் நிலவின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என வகைப்படுத்தப்படுகிறது. மேல்நோக்கு நாட்களில் கூறைபோடுதல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளையும் கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், கடைகோல் போடுதல் போன்ற நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.