கீழ்ப்படிதல் (மனித நடத்தை)

சமுதாயத்தில் மாணவர்களின் பொறுப்பு மற்றும் வயதில் முதவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதை

மனித நடத்தையில் கீழ்ப்படிதல் (Obedience (human behavior)) என்பது " சமூக செல்வாக்கின் ஒரு வடிவமாகும், இது ஒரு நபர் ஒரு அதிகாரியின் வெளிப்படையான அறிவுறுத்தல்கள் அல்லது உத்தரவுகளுக்கு இணங்குவதனைக் குறிக்கிறது".[1] கீழ்ப்படிதல் பொதுவாக இணக்கத்திலிருந்து வேறுபடுத்தப்படுகிறது, சில எழுத்தாளர்கள் "சக நண்பர்களால் பாதிக்கப்படும் நடத்தை" என வரையறுக்கின்றனர், மற்றவர்கள் மற்றொரு நபரின் கோரிக்கைக்கு நேர்மறையான பதிலாக இதைப் பயன்படுத்துகின்றனர்.[2] சூழலைப் பொறுத்து, கீழ்ப்படிதல் ஒழுக்கம் அல்லது ஒழுக்கக்கேடானதாகக் காணலாம். எடுத்துக்காட்டாக, உளவியல் ஆராய்ச்சியில், தனிநபர்கள் உள் மோதலைத் தோற்றுவிக்க வடிவமைக்கப்பட்ட ஒழுக்கக்கேடான கோரிக்கைகளை எதிர்கொள்ளும் வகையிலான சூழலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். அந்தச் சூழலுக்கு இணங்கினால் அவர்கள் கீழ்ப்படிதலுடன் செயல்படுகிறார்கள் என்று அறியப்படும். [3]

பரிசோதனை ஆய்வுகள்

தொகு

பாரம்பரிய முறைகள் மற்றும் முடிவுகள்

தொகு

மற்ற துறைகள் கீழ்ப்படிதலை ஆய்வு செய்திருந்தாலும், சமூக உளவியல் கீழ்ப்படிதல் குறித்த ஆராய்ச்சியின் முன்னேற்றத்திற்கு முதன்மையான காரணமாகும். இது பல்வேறு வழிகளில் சோதனை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பார்டோவின் பரிசோதனை

தொகு

கீழ்ப்படிதல் பற்றிய பாரம்பரிய ஆய்வு 1970 களில் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. பிலிப் ஜிம்பார்டோ பரிசோதனையின் முக்கிய உளவியலாளர் ஆவார். இசுட்டான்போர்டு சிறைச்சாலை பரிசோதனையில், பங்கேற்பாளர்களின் நடத்தையில் "சமூக சக்திகளின்" தாக்கங்களை ஆய்வு செய்வதற்காக கல்லூரி வயது மாணவர்கள் போலியான சிறை சூழலில் வைக்கப்பட்டனர். [4] ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரே மாதிரியான சோதனை நிலைமைகளுக்கு உட்பட்ட மில்கிராம் ஆய்வைப் போலல்லாமல், இங்கு சீரற்ற ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி பாதி பங்கேற்பாளர்கள் சிறைக் காவலர்களாகவும் மற்றும் மற்ற பாதியினர் கைதிகளாகவும் செயல்பட்டனர். ஒரே நேரத்தில் "சிறையின் உளவியல் நிலையை" தூண்டும் அதே நேரத்தில் உடல் ரீதியாக சிறைச்சாலையை ஒத்ததாக சோதனை அமைப்பு உருவாக்கப்பட்டது. [4]

முடிவுகள்

தொகு

ஆய்வில் உள்ள காவலர்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து ஆக்ரோசமாக மாறியதால் ஜிம்பார்டோவும் மில்கிராமின் ஆய்வு போன்ற முடிவுகளைப் பெற்றார். கைதிகள் பாதுகாவலர்களுக்கு விரோதமாகவும் வெறுப்புடனும் நடந்துகொண்டனர். "காவலர்களின்" கொடுமை மற்றும் "கைதிகளின்" மன அழுத்தம் ஆகிய காரணங்களால் ஜிம்பார்டோ 6 நாட்களுக்குப் பிறகு பரிசோதனையை முன்கூட்டியே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [4]

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Colman, Andrew (2009). A Dictionary of Psychology. Oxford New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199534067.
  2. Hogg (2010). "Influence and Leadership". In Fiske (ed.). Handbook of Social Psychology (2 ed.). Wiley. pp. 1166–1207.
  3. Haslam; Reicher (2017). "50 years of "obedience to authority": From blind conformity to engaged followership". Annual Review of Law and Social Science 13: 59-78. 
  4. 4.0 4.1 4.2 Haney, C; Banks, C.; Zimbardo, P. (1973). "Interpersonal dynamics in a simulated prison". International Journal of Criminology and Penology 1: 69–97.