கீழ்ராவந்தவாடி நடுகல்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவமன்னன் நந்திவர்மனின் 44 ஆவது ஆட்சிஆண்டில் மலாட்டு மேற்கோவலூர் நாட்டு இராமந்தைவாடியில் மங்களப்பெருமனார் படை தாக்கிய போது வாணபெருமானாரின் சேவகன் வேணர்க்களியன் என்பவர் வீரமரணம் அடைந்ததைக்குறிப்பிடும் நடுகல்லாகும். இப்பகுதி மாடுகளை இரவில் மந்தையாக அடைத்து வைக்கும் இடமாக இருந்ததால் இரவு மந்தைப்பாடி என்று பெயர் பெற்று இன்று கீழ்ராவந்தவாடியாக மருவியுள்ளது. இந்நடுகல் தற்போது வேடியப்பனாக வணங்கப்படுகிறது.
வட்டெழுத்துக் கல்வெட்டு :
- கோவிசைய நந்தீச்சுவ
- ர விர்கிரமபருமற்கு யாண்டு நாற்பத்
- து நாற்காவது மலாட்டு மேற்கோவலூர் நா
- ட்டு இராமந்தைவாடி மேற்மங்கள பெரு
- மானார் படை வந்த ஞான்று வாணபெருமானார்க் கா
- ய்ப்பட்டான் வேணர்
- க் களியன்.
உசாத்துணை நூல் - செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு தொல்லியல் துறை, 1974