குகா பர்ரே

இந்திய அரசியல்வாதி

குகா பர்ரே (Kuka Parray) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முகமது யூசுப் பர்ரே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். காசுமீரில் இவர் சட்டமனற உறுப்பினராகவும் சம்மு & காசுமீர் விடுதலை முன்னணி கட்சியின் நிறுவனராகவும் இருந்தார்.[1] இக்வான்-உல்-முசுலிமூன் என்ற அரசாங்க சார்பு போராளிகள் அமைப்பை நிறுவுவதற்கு முன்பு, காசுமீரி மொழியில் நாட்டுப்புற பாடல்கள் பாடுகின்ற ஒரு நாட்டுப்புறப் பாடகராகவும் இவர் அறியப்பட்டார். [2][3] சம்மு-காசுமீரில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியப் படைகளுக்கு இவரது மரணம் பெரும் அடியாகக் கருதப்படுகிறது. அப்போதைய முதல்வர் முப்தி முகமது சயீத், இவரது கொலையை "அமைதி நடவடிக்கைக்கு பின்னடைவு" என்று விவரித்தார்.

குகா பர்ரே
Kuka Parray
இறப்பு(2003-09-13)13 செப்டம்பர் 2003
ஆச்சின், பந்திபோரா மாவட்டம், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
தீவிரவாதிகளால் பதுங்கியிருந்து கொல்லப்பட்டார்
மற்ற பெயர்கள்முகமது யூசுப் பர்ரே
அறியப்படுவதுகிளர்ச்சிக்கு எதிரான இயக்கம் சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிசம்மு காசுமீர் விடுதலை முன்னணி

இறப்பு தொகு

சம்மு காசுமீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் சோனாவாரியில் துடுப்பாட்ட போட்டியை துவக்கி வைக்க பர்ரே சென்று கொண்டிருந்த போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் இவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பர்ரே இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குகா_பர்ரே&oldid=3847933" இலிருந்து மீள்விக்கப்பட்டது