குக்கரெங்கோயிட்டு-(Ce)
குக்கரெங்கோயிட்டு-(Ce) (Kukharenkoite-(Ce)) என்பது Ba2CeF(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பேரியம் சீரியம் புளோரைடு கார்பனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தின் மாண்ட்டு-செயிண்ட்டு-இலேர் நகரத்திலும் உருசியாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கிபினி மலைத் தொடரிலும் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து இக்கனிமம் அடையாளம் காணப்பட்டது. உருசிய கனிமவியலாளர் அலெக்சாண்டர் ஏ. குக்கரெங்கோவின் (1914-1993) நினைவாகக் கனிமத்திற்கு குக்கரெங்கோயிட்டு-(Ce) என்று பெயரிடப்பட்டது.[2][3]
குக்கரெங்கோயிட்டு-(Ce) Kukharenkoite-(Ce) | |
---|---|
கனடாவின் கியூபெக் மாகணத்தில் கிடைத்த குக்கரெங்கோயிட்டு-(Ce) | |
பொதுவானாவை | |
வகை | காரபனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ba2CeF(CO3)3 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மேற்கோள்கள் | [1][2][3] |
இதேபோன்ற சீனாவில் கிடைக்கும் சீரியம் தனிமத்தைக் கொண்டிருக்கும் கனிமமான சோங்குவாசெரைட்டு கனிமம் குக்கரெங்கோயிட்டு-(Ce) அல்லது உவாங்கோயிட்டு-(Ce) என்று கருதப்படுகிறது..[4]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் குக்கரெங்கோயிட்டு கனிமத்தை Kkk-Ce[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 Mindat with location data
- ↑ 3.0 3.1 Webmineral data
- ↑ Mindat - Zhonghuacerite-(Ce)
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.