குசுமலதா
குசுமலதா அல்லது மாற்றாந்தாய் என்பது 1951 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இலங்கை மொழிமாற்றத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 1951 இல் சிங்கள மொழியில் வெளியான சங்கவுன பிலித்துற (சிங்களம்: සැඟවුණු පිළිතුර, மறைக்கப்பட்ட பதில்) என்ற திரைப்படத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. பி. ஏ. டபிள்யூ. ஜயமான்ன இதன் இயக்குநர் ஆவார். இவர் தான் முன்னர் தயாரித்த ஒரு வெற்றி நாடகத்தையே பின்னர் திரைப்படமாகத் தயாரித்தார். விக்டர் குரேரா, ருக்மணி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். முகம்மது கவுஸ் மாஸ்டர் இத்திரைப்படத்துக்கான இசையை வழங்கினார். தென்னிந்தியாவில் அப்போது பிரபலமாகவிருந்த பி. ஹனுமந்தராவ் கதை வசனத்தை மொழிபெயர்த்து பாடல்களையும் எழுதினார். தமிழ்த் திரைப்படம் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் திரையிடப்பட்டது.
குசுமலதா அல்லது மாற்றாந்தாய் | |
---|---|
இயக்கம் | பி. ஏ. டபிள்யூ. ஜயமான்ன |
தயாரிப்பு | பி. ஏ. டபிள்யூ புரடக்சன்சு |
திரைக்கதை | பி. ஹனுமந்தராவ் |
இசை | முகம்மது கவுஸ் |
நடிப்பு | விக்டர் குரேரா ருக்மணி தேவி |
வெளியீடு | திசம்பர் 29, 1951 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ருக்மணி தேவி
- விக்டர் குரேரா
- லெடிசியா பீரிஸ்
- எடி ஜெயமன்ன
பாடல்கள்
தொகுபாடல் | பாடியோர் | இசை | பாடல் வரிகள் |
---|---|---|---|
பூலோக மோகினி என் பிரேமை ராணி நீ[1] | எம். லூயிஸ், ருக்மணி தேவி | முகம்மது கவுஸ் மாஸ்டர் | பி. ஹனுமந்தராவ் |
வண்டே ஹல்வா துண்டே[2] | ஜே. பி. சந்திரபாபு, எம். ஆர். சகுந்தலா | முகம்மது கவுஸ் மாஸ்டர் | பி. ஹனுமந்தராவ் |
மங்கள கீதம் இதானே[3] | எம். லூயிஸ், ருக்மணி தேவி | முகம்மது கவுஸ் மாஸ்டர் | பி. ஹனுமந்தராவ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ யூடியூபில் பூலோகமோகினி பாடல், 70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
- ↑ யூடியூபில் வண்டே ஹல்வா துண்டே பாடல்
- ↑ யூடியூபில் மங்கள கீதம் இதானே பாடல், 70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!