குசோங்கைட்டு

கார்பைடு கனிமம்

குசோங்கைட்டு (Qusongite) என்பது WC என்ற எளிய மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய மிகவும் அரிதான ஒரு கனிமமாகும். இந்த கனிமமானது இயற்கையாகத் தோன்றும் தங்குதன் கார்பைடு கனிமமாகும். சீனாவின் உலுவொபுசா மண்டலத்திலுள்ள பண்டைய ஓபியோலைடு பாறைகளின் மேற்பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓபியோலைட்டு பாறைகள் இயற்கை சிலிக்கான் கார்பைடான மொய்சானைட்டு போன்ற கனிமங்களின் ஒடுக்கப்பட்ட பூர்வீக உலோகங்கள், வைரம், சிலிசைடுகள் மற்றும் கார்பைடுகள் உள்ளிட்ட பல இயற்கையான குறைக்கப்பட்ட சேர்மங்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்றதாகும். குசோங்கைட்டு கனிமம் அறுகோண அமைப்பில், P-6m2 என்ற இடக்குழுவில் படிகமாக்குகிறது.[2][3][4] பன்னாட்டு கனிமவியல் சங்கம் Qus என்ற குறியீட்டால் குசோங்கைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[5]

குசோங்கைட்டு
Qusongite
பொதுவானாவை
வகைபூர்வீகத் தனிம கனிமங்கள்
வேதி வாய்பாடுWC
இனங்காணல்
நிறம்கருப்பு, சாம்பல் கலந்த எஃகு நிறம்
படிக அமைப்புஅறுகோணப் படிகங்கள்
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Mindat
  2. Fang, Q., Bai, W., Yang, J., Xu, X., Li, G., Shi, N., Xiong, M., and Rong, H., 2009. Qusongite (WC): A new mineral. American Mineralogist 94(2-3), 387-390.
  3. "Qusongite: Qusongite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. "Luobusha ophiolite ("Luobusa ophiolite"), Qusum Co. (Qusong Co.), Shannan Prefecture (Lhokha Prefecture; Lhoka Prefecture), Tibet Autonomous Region, China - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசோங்கைட்டு&oldid=4085331" இலிருந்து மீள்விக்கப்பட்டது