குச்சுயிரி உயிர்க்கல கட்டமைப்பு
குச்சுயிரி உயிர்க்கலக் கட்டமைப்பு (bacterial cell structure) எளிமையானது. இருந்தபோதிலும் இது நன்கு வளர்ந்த உயிர்க்கல கட்டமைப்பாகும். இதுவே பல்வேறு தனித்தன்மையான உயிரியல் கட்டமைப்புகளுக்கும் அதன் நோயீனித்தன்மைக்கும் காரணமாகிறது. பல கட்டமைப்புக் கூறுபாடுகள் குச்சுயிரிகளுக்கே உரியவை; அவை தொல்லுயிரிகளிலும் அல்லது முழுக்கருவன் உயிரிகளிலும் காணப்படவில்லை. பெரிய உயிரினங்களுடன் ஒப்பிடும்போது குச்சுயிரியின் எளிமையும் அவற்றைச் செய்முறையில் எளிதாகக் கையாள முடிவதாலும் அவற்றின் கலக் கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்ய வழிவகுத்தது; இந்த ஆய்வைப் பிற உயிரினங்களுக்குப் பயன்படுத்த முடிந்தது. இதனால், பல உயிர்வேதியியல் நெறிமுறைகள் கண்டறியப்பட்டன.
கல உருவவியல்
தொகுகுச்சுயிரிகளின்ன் மிக அடிப்படையான இயல்பு அவற்றின் கல வடிவமே ஆகும். வகைமை எடுத்துகாட்டுகள் கீழே உள்ளன:
- வட்டம் அல்லது கோல வடிவம்
- தண்டு வடிவம்
- கோளத்துக்கும் தண்டுக்கும் இடையிலான வடிவம்
- சுருளி வடிவம்
- நீள்படல வடிவம்
கல வடிவம் பொதுவாக குறிப்பிட்ட குச்சுயிரி இனத்தைச் சார்ந்துள்ளது; ஆனால், வளர்ச்சி சூழ்நிலைமைகளைப் பொறுத்து கல வடிவம் மாற வாய்ப்புள்ளது.
குச்சுயிரிக்கல மாந்தக் கல ஒப்பீடு (இரண்டும் கோளங்களாகக் கருதப்படுகின்றன) :
குச்சுயிரிக் கலம் | மாந்தக் கலம் | ஒப்பீடு | |
---|---|---|---|
விட்டம் | 1μm | 10μm | குச்சுயிரி 10 மடங்கு சிறியது. |
பரப்பு | 3.1μm² | 314μm² | குச்சுயிரி 100 மடங்கு சிறியது. |
பருமன் | 0.52μm³ | 524μm³ | குச்சுயிரி 1000 மடங்கு சிறியது. |
பரப்பு-பருமன் விகிதம் | 6 | 0.6 | குச்சுயிரி10 மடங்கு பெரியது. |