குச்சு குச்சு ரங்கம்மா

குச்சு குச்சு ரங்கம்மா என்னும் இந்த விளையாட்டு இரண்டு குழுச் சிறுமியர் பாடி மகிழும் விளையாடு.

ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு வட்டங்களில் இரண்டு குழுவினர் அமர்ந்து பாடுவர். (குழுவின் சமநிலை எண்ணிக்கை என்பது வேண்டுவதில்லை) பாடல் சேர்ந்திசைப் பாடலாக இருக்கும். ஒரு குழு வினாப்பாடல் பாடும். மற்றொரு குழு அதற்கு விடைப்பாடல் பாடும்.

பாடல் மகளிர் திருமணம் பற்றியதாக இருக்கும். சாதி-சனத்தில் பெண் இல்லை, பணத்துக்குப் பெண்ணை விற்பார் இல்லை என்னும் கருத்துக்கள் இந்த விளையாட்டால் சிறுமிகளுக்கு சொல்லப்படும்.

வினாப்பாடல்
குச்சு குச்சு ரங்கம்மா பொண்ணுண்டா
கூசாலி ரங்கம்மா பொண்ணுண்டா
சாதி சனமெல்லாம் பொண்ணுண்டா
சம்மந்த வழியெல்லாம் பொண்ணுண்டா
விடைப்பாடல்
குச்சு குச்சு தங்கம்மா பொண்ணில்லே
கூசாலி தங்கம்மா பொண்ணில்லே
சாதி சனமெல்லாம் பொண்ணில்லே
சம்மந்த வழியெல்லாம் பொண்ணில்லே
வினாப்பாடல்
குச்சு குச்சு ரங்கம்மா பணம் தாரேன்

விடைப்பாடல்

குச்சு குச்சு தங்கம்மா பணம் வேண்டாம்

இப்படிப் பாடல் பலவாக வளரும்

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சு_குச்சு_ரங்கம்மா&oldid=972627" இலிருந்து மீள்விக்கப்பட்டது