குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள்
குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பவர்கள் இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்யசபா என அழைக்கப்படுகின்ற அவையில் குஜராத் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். 1952 முதல், பம்பாய் மாநிலம் 17 இடங்களையும், சௌராஷ்டிரா மாநிலம் 4 இடங்களையும், கட்ச் மாநிலம் 1 இடத்தையும் தேர்ந்தெடுத்தது. 1956-ல் அரசியலமைப்பு (ஏழாவது திருத்தம்) சட்டத்திற்குப் பிறகு, பம்பாய் மாநிலம் 27 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. 1960ஆம் ஆண்டின் பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு, மூன்று இடங்கள் அதிகரிக்கப்பட்டது. மே 1, 1960 முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய குஜராத் மாநிலம் 11 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது, புதிய மகாராட்டிரா மாநிலம் 19 இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. மாநில சட்டமன்றங்களுக்குள் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவம் உடன் ஒற்றை மாற்றத்தக்க வாக்கு பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. [1]
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுதற்போது குஜராத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
தற்போதைய உறுப்பினர்கள்
தொகுவ. எண் | உறுப்பினர்[2] | கட்சி | பதவி-முதல்[3] | பதவி-வரை[3] | |
---|---|---|---|---|---|
1 | இராம்பாய் மொகாரியா | பாரதிய ஜனதா கட்சி | 22-பிப்ரவரி-2021 | 21-சூன்-2026 | |
2 | இரமிலாபென் பாரா | பாரதிய ஜனதா கட்சி | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | |
3 | நர்அரி அமீன் | பாரதிய ஜனதா கட்சி | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | |
4 | பர்சோத்தம்பாய் ரூபாலா | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
5 | மன்சுக் எல். மாண்டவியா | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
6 | சுப்ரமணியம் ஜெய்சங்கர் | பாரதிய ஜனதா கட்சி | 06-சூலை-2019 | 18-ஆகத்து-2023 | |
7 | ஜுகல்ஜி மாதுர்ஜி தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | 06-சூலை-2019 | 18-ஆகத்து-2023 | |
8 | தினேஷ்சந்திர அனவதியா | பாரதிய ஜனதா கட்சி | 22-பிப்ரவரி-2021 | 18-ஆகத்து-2023 | |
9 | சக்திசிங் கோகில் | இந்திய தேசிய காங்கிரசு | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | |
10 | அமீ யாஜ்னிக் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
11 | நாரன்பாய் ரத்வா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 |
மேனாள் உறுப்பினர்கள்
தொகுவ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | அருண் ஜெட்லி | பாரதிய ஜனதா கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
2 | பேராசிரியர் ஆல்கா பல்ராம் சத்திரியா | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
3 | பிரவீன் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | 19-02-2010 முதல் 18-08-2011 வரை |
4 | பாரத்சிங் பிரபாத்சிங் பரமர் | பாரதிய ஜனதா கட்சி | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
5 | அகமது படேல் | இந்திய தேசிய காங்கிரஸ் | 19-08-2005 முதல் 18-08-2011 வரை |
6 | காஞ்சிபாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
7 | சுரேந்திர மோதிலால் படேல் | பாரதிய ஜனதா கட்சி | 19-08-2005 முதல் 18-08-2011 வரை |
8 | பிரவீன் ராஷ்டிரபால் | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
9 | பர்சோத்தம் கோதபாய் ரூபலா | பாரதிய ஜனதா கட்சி | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
10 | விஜயகுமார் ரூபானி் | பாரதிய ஜனதா கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
11 | நாட்டுஜி கலோஜி தாகுர் | பாரதிய ஜனதா கட்சி | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
தொகு- ↑ "Composition of Rajya Sabha - Rajya Sabha At Work" (PDF). rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 December 2015.
- ↑ "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
- ↑ 3.0 3.1 "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.