கஜ சம்ஹாரத் தாண்டவம்
(குஞ்சரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கஜ சம்ஹாரத் தாண்டவம் என்பது யானையின் தோலை உரித்த நிலையில் சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவமாகும். [1] தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார். களிற்றுரி என்றும் கஜ சம்காரத் தாண்டவத்தினை அழைக்கின்றனர். [1]இந்த தாண்டவத்திற்கு குஞ்சரம் என்றும் பெயர் உள்ளது. இந்த தாண்டவத்தலிருந்து ராஜ நடனம் உண்டானது.[1] காண்கதொகுஆதாரம்தொகுவெளி இணைப்புகள்தொகு |