குடபுலம் என்பது சேரநாடு. தமிழகத்தின் மேற்கில் உள்ளமையால் இதனைக் குடபுலம் என்றனர். சோழநாட்டைக் குணபுலம் என்றும், பாண்டியநாட்டைத் தென்புலம் என்றும் குறிப்பிட்டனர். (குடக்கு = மேற்கு; குணக்கு = கிழக்கு) இது இருப்பிடம் நோக்கிய திசைக் குறியீட்டுப்பெயர்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை எறிந்தான் என்று புறநாற்றுப் பாடலின் கொளுக்குறிப்பு குறிப்பிடுகின்றது. வஞ்சிமுற்றத்தில் அதரி திரித்தான் என்று பாடல் குறிப்பிடுகிறது.

அதரி திரித்தல் என்பது உழவர் போர்களத்தில் நெல்லந்தாளைப் பிணையல் கட்டி ஓட்டுவது. சோழன் வஞ்சி நகரத்தில் பகைவீரர்களை இவ்வாறு துவட்டினானாம். [1]

அடிக்குறிப்பு தொகு

  1. வஞ்சிமுற்றம் வயக்களனாக அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் கொண்டனை பெரும குடபுலத்து அதரி - கோவூர் கிழார் – புறம் 373
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடபுலம்&oldid=880166" இலிருந்து மீள்விக்கப்பட்டது