குடும்பத் தலைவி
பொதுவாகத் தலைமை தாங்கும் ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் கூறுகிறோம்.
கும்பத்தில் தலைவன் உயிருடன் இல்லாதபோது குடும்பத்துக்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தும் தலைவியாகிய பெண்மகளைக் குடும்பத் தலைவி என்பது வழக்கம். இது உலகெங்கும் பின்பற்றப்படும் வழக்கம். பண்டைய உலகில் வெளியிடங்களுக்குச் சென்று வரும் ஆண்மகன் பலரும் அறிந்த ஒருவனாக விளங்கினான். பெண்மகள் அவ்வாறு ஊரறிந்த ஒருத்தியாக இல்லை. எனவே குடும்பத் தலைவனுக்கே முதன்மை இடம் தரப்பட்டது.
இந்தக் குடும்பத் தலைவியின் பெயர் பதிவில் இருக்கும்.
அகத்திணையில் தலைவியாக வரும் பெண்ணின் பெயர் இலக்கியங்களில் யாண்டும் கூறப்படுவதில்லை.