குடும்ப மருத்துவர்

குடும்ப மருத்துவர் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்பவர்கள் ஒரு காலத்தில் பெரும்பான்மையாக இருந்த ஒரு மருத்துவப் பிரிவினராவர். இவர் ஒரு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பார், மருத்துவம் பெற வரும் குடும்ப உறுப்பினர்கள் ஏறக்குறைய அனைவரைப் பற்றியும் ஒரளவு அறிந்தவராக இருப்பார். அதனால், அவர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு எது ஒவ்வாமை, என்ன பிரச்னை என முன் உணர்ந்து சிகிச்சை தருவார். நடமாட இயலாதவர்களின் வீட்டுக்கே வந்து மருத்துவம் பார்ப்பார்.[1]

குடும்ப மருத்துவர்கள் என்பவர்கள் பொதுவாக எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்களாகவும், சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள். இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள். சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு அவர்களை சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "தேவை ஒரு குடும்ப மருத்துவர்!". கட்டுரை. விகடன். 1 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
  2. "டாக்டரைப் பார்க்கப் போகிறீர்களா? - குடும்ப மருத்துவரா, சிறப்பு மருத்துவரா?". கட்டுரை. தி இந்து. 24 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்ப_மருத்துவர்&oldid=3576989" இலிருந்து மீள்விக்கப்பட்டது