குட்டிக்கதைகள் (நூல்)

குட்டிக்கதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 53 குட்டிக்கதைகளின் தொகுப்பு ஆகும். “சில கருத்துகளை கதைவடிவில் சொன்னால்தான் மனதிலே படிகின்றன.” என இக்கதைகளை எழுதியதற்கான காரணத்தை நூலின் முன்னுரையான “கதைத்த காரணம்” என்னும் பகுதியில் கண்ணதாசன் குறிப்பிட்டு இருக்கிறார். இக்கதைகள் அனைத்தும் கண்ணதாசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இதழ்களில் எழுதப்பட்டவைகளாகும். அவற்றை நூலாகத் தொகுத்தவர் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய இராம. கண்ணப்பன் ஆவார். பதிப்பித்தவர் ஆ. திருநாவுக்கரசு ஆவார். [1]

குட்டிக்கதைகள்
நூல் பெயர்:குட்டிக்கதைகள்
ஆசிரியர்(கள்):கண்ணதாசன்
வகை:இலக்கியம்
துறை:அங்கதம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:64
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
13 தீனதயாளு தெரு
தியாகராயர் நகர்
சென்னை 600 001
பதிப்பு:மு.பதிப்பு 1971

இந்நூலை 1971ஆம் ஆண்டு சனவரியில் அன்றைய தமிழக முதல்வரும் கண்ணதாசனுக்கு நண்பருமான மு. கருணாநிதி வெளியிட்டார்[1].

இந்நூலில் பின்வரும் கதைகள் இடம்பெற்றுள்ளன:

 1. விழிப்பு
 2. அறிஞர் எவ்வழி
 3. எதை வளர்ப்பது?
 4. வளையம்
 5. அசலும் நகலும்
 6. கலையும் கவியும்
 7. ஒரே உண்மை
 8. பரிசு
 9. உதிர்ந்த சந்திரன்
 10. முதலில் எது?
 11. ஞானம்
 12. தீர்ப்பு
 13. விரக்தி
 14. சேவை
 15. கடிகாரம்
 16. விஷம்
 17. ‘ட்ரா’
 18. மலினம்
 19. அது போதுமே!
 20. தப்பும்மா!
 21. சூட்சுமம்
 22. நாக்கின் கதை
 23. ரசனை
 24. புகுவாரா
 25. திருப்தி
 26. ஞானத்தின் பின்பக்கம்
 27. நாலாவது ஏழை
 28. துன்ப சிநேகிதன்
 29. ‘ஏழ்’ பிறவி
 30. மானஸ ராகம்
 31. பலப்பரீட்சை
 32. நன்றி
 33. ‘கொடி’ய நாடு
 34. பார்த்தீரோ…
 35. கர்ப்பக்கிரகம்
 36. பணாஸ்திகம்
 37. தவளை நாயகம்
 38. அய்யாம் சாரி
 39. கம்! கம்!
 40. எங்கே நிம்மதி?
 41. பொருளாதாரம்
 42. நெஞ்சின் கனம்
 43. ஜன கண மரம்
 44. அரசியல்வாதிகளுக்கு மட்டும்!
 45. பத்திரிகை
 46. அவன் குளிக்கும் இடங்கள்
 47. கிளி ஜோஸியம்
 48. சமூக சேவகி
 49. அதற்கு இது
 50. ரகசியம்
 51. ஞானோதயம்
 52. ட்யூப்லைட்
 53. நடுநாயகம்

சான்றடைவுதொகு

 1. 1.0 1.1 கண்ணதாசன், குட்டிக்கதைகள், சென்னை, வானதி பதிப்பகம், 1971
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டிக்கதைகள்_(நூல்)&oldid=1992155" இருந்து மீள்விக்கப்பட்டது