குட்டுவன் கண்ணனார்

குட்டுவன் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை 179ஆம் பாடலாக உள்ளது.

குறுந்தொகை 179 பாடல் சொல்லும் செய்திதொகு

  • குறிஞ்சித்திணை
  • பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தது போன்று திருமணம் செய்துகொள்ளும்படி தூண்டும் செய்தி இந்தப் பாடலில் உள்ளது.

கடமானைத் துரத்தித் துரத்தி உன் வேட்டைநாய்(ஞமலி) களைப்பால் இளைப்பு வாங்குகிறது. பகல் பொழுதும் போய்விட்டது. இனி உன் ஊருக்குச் செல்லவேண்ணடாம். உதோ எம் ஊர் தெரிகிறது. (தங்கிச் செல்லலாம்) என்கின்றனர் தலைவியும் தோழியும்.

உள்ளுறைதொகு

மூங்கில் வரைத்தேனைக் கிழிக்கும். அந்த மூங்கிலை யானை வளைத்து உண்ணும்.
தலைவி தலைவனின் தேனைச் சுவைப்பாள். தலைவன் தலைவி மூங்கிலை வளைந்து உண்பான்.
தலைவி தன் கையால் உதோ என்று சுட்டிக் காட்டும் அவளது ஊர் இப்படிப்பட்டதாம்.

பழந்தமிழ்தொகு

  • ஐய - தலைவனை விளிக்கும் சொல்
  • உது - இடைமைச் சுட்டு (அருகிலும் தொலைவிலும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தொலைவில் காணப்படும் பொருள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டுவன்_கண்ணனார்&oldid=2717985" இருந்து மீள்விக்கப்பட்டது