குட்டுவன் கீரனார்

குட்டுவன் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் காணப்படுகிறது. அது புறநானூறு 240 எண் கொண்ட பாடலாக உள்ளது.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் இறந்து போனதை எண்ணி இரங்கும் பாடல் இது.

இரங்கல் தொகு

யானை, குதிரை, தேர், நாட்டுப் பகுதிகள்(வயல்கள்), ஊர்கள் முதலானவற்றையெல்லாம் ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிவந்தான். அவனைக் காலன் என்னும் கண்ணிலி(இரக்கமில்லாதவன்) தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவனுடன் அவனது மனைவியரும் சென்றுவிட்டனர். இதனை அறிந்து மரப் பொந்தில் வாழும் கூகை 'சுட்டுக் குவி' என்று குழறுகிறது. கள்ளிச் செடிகள் நிறைந்த சுடுகாட்டில் அவனது உடலைத் தீக்கு இரையாக்கிவிட்டனர். புலவர்கள் தம்மைப் புரக்கும் புரவலரைக் காணாமல் ஊர் ஊராகத் திரியலாயினர். என் செய்வர்? அந்தோ!

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டுவன்_கீரனார்&oldid=2717986" இலிருந்து மீள்விக்கப்பட்டது