தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982

(குண்டர் தடுப்புச் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டு வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டம். இச்சட்டம் குண்டர்கள் தடுப்புச் சட்டம்[1] என பொதுவாக தமிழகத்தில் அழைக்கப்படுகின்றது. 2004 இல் திருட்டு வீடியோ, சி.டி குற்றமும் , 2006இல் மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் இதன் கீழ் சேர்க்கப்பட்டன .

சட்டத்தின் உட் பிரிவுகள்

தொகு

ஒருவர் குற்றம் புரிவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தைச் சேர்ந்தது குண்டர் சட்டம்

  • கைதாளர்களுக்கு ஒரு வருடம் கட்டாய சிறை , பிணை கிடையாது.
  • எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.
  • கைதாளர் முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் விசாரணைக் குழு ஆகும். கைதாளர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது.கைதாளரே நேரிலோ அல்லது அவர் நண்பரோ உறவினரோ தான் முறையிட முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு அரசு அரசினர் செய்தியிதழ் பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009