குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம்
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் (Gundla Brahmeswaram Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இச்சரணாலயத்தின் வடக்கு பகுதி நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary | |
---|---|
குண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகத்தில் நீலப்புலி (திருமலை லிம்னியாசு) பட்டாம்பூச்சிகள் | |
அமைவிடம் | நந்தியால் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 15°39′40″N 78°44′43″E / 15.6612°N 78.7452°E |
பரப்பளவு | 1,194 km2 (461.0 sq mi) |
நிறுவப்பட்டது | 1990 |
நிருவாக அமைப்பு | ஆந்திரப்பிரதேச வனத்துறை |
வரலாறு
தொகுகுண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் செப்டம்பர் 18, 1990 அன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] குண்டலா பிரம்மேசுவரம் பீடபூமியிலிருந்து இந்த சரணாலயம் இதன் பெயரைப் பெற்றது.[2]
விளக்கம்
தொகுகுண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.[3] இது மந்திராலம்மா கனும மற்றும் நந்திகனுமா மலைப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது.[1] இந்த சரணாலயம் 1,194 km2 (461.0 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்த காட்டுயிர் காப்பகத்தின் வடக்குப் பகுதியில் நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதியாக உள்ளது.[1] இந்த சரணாலயத்தின் வழியாக குண்டலகம்மா ஆறு ஓடுகிறது.[1]
தாவரங்களும் விலங்கினங்களும்
தொகுஅருகிய பத்து சிற்றினங்கள் உட்பட 353 வகையான தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன.[1] குண்டலா பிரம்மேசுவரா சரணாலயத்தில் உள்ள பாலூட்டிகளில் குரங்குகள், சிறுத்தைகள், புலிகள், எலிகள், துரும்பன் பூனைகள், இந்திய பறக்கும் அணில், குதிரை இலாட வௌவால், சருகுமான், எறும்புத்தின்னி, கடமான், நீலான் மற்றும் குல்லாய் குரங்கு ஆகியவை அடங்கும்.<[1][2] 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சரணாலயத்தில் 23 புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 17 பெண் புலிகள், ஐந்து ஆண் புலிகள் மற்றும் குட்டி புலி ஒன்று அடங்கும்.[3]
அச்சுறுத்தல்கள்
தொகுகுண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு காப்பகத்தில் உள்ள உள்நாட்டுப் பல்லுயிர் வளம் ஆக்கிரமிப்பு தாவர வகைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "GUNDLA BRAHMESWARAM WILDLIFE SANCTUARY". forests.ap.gov.in. Andhra Pradesh Forest Department.
- ↑ 2.0 2.1 "Gundla Brahmeswara Wildlife Sanctuary | Wildlife in India Foundation". 30 December 2019.
- ↑ 3.0 3.1 3.2 Staff Reporter (3 May 2019). "23 tigers spotted in Gundla Brahmeswaram Sanctuary" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/23-tigers-spotted-in-gundla-brahmeswaram-sanctuary/article27028912.ece.
- ↑ "Inventory of invasive alien plant taxa in gundla brahmeswaram wildlife sanctuary, Nallamalais, India: Implications for monitoring and management". International Journal of Ecology and Environmental Sciences 3 (3). 2021. http://www.ecologyjournal.in/archives/2021.v3.i3.411.