குண்டே
குண்டே என்னும் ஊர், நேபாளத்தின் வடகிழக்கே உள்ள கும்புப்பகுதியில் சாகரமாதா நாட்டுப்புரவகத்திற்கு உள்ளடங்கிய பகுதியில் உள்ளது. செர்ப்பா மக்கள் தங்கள் புனித மலையாகக் கருதும் குமுஞ்சுங்கு கும்பி யுல்-லா (Khumjung Khumbi Yul Lha) மலையின் அடிவாரத்தில் குமுஞ்சுங்கு ஊருக்கு அருகே இவ்வூர் அமைந்துள்ளது. குமுஞ்சுங்கு பள்ளத்தாக்கு கடல்மட்டத்திலிருந்து 3800 மீ முதல் 4000 மீ வரையில் உள்ள உயரத்தில் அமைந்துள்ளது. குண்டே ஊரானது குமுங்கு ஊரைவிட சற்று உயரத்தில் பள்ளத்தாக்கின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. எடுமண்டு இல்லரி 1966 இல் நிறுவிய குண்டே மருத்துவமனை இங்குள்ளது. குண்டே ஊர் எவரெசுட்டு மலையில் இருந்து 25 கி.மீ தொலைவில் நேபாள-சீன நாடுகளின் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.