குதிரைக்குக் காணம் காட்டல்
குதிரைக்குக் காணம் காட்டல் என்பது கரணம் போட்டுக் காலால் பந்து எறிந்து விளையாடும் அணி விளையாட்டு. காணம் என்பது கொள்.
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சுமார் 15 அடி இடைவெளி விட்டுக் கோடு போட்டுள்ள விளையாட்டுத் திடல். துணியில் திரித்த பந்து ஒன்றைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் ஒரு அணியிலிருந்து ஒருவர் வீசுவார். அவ்வாறு வீசும்போது காலோ, கையோ தன் எல்லைக் கோட்டைத் தாண்டவோ, தொடவோ கூடாது. வீசிய பந்து எதிரணியினர் எல்லைக்கோட்டைத் தாண்டி விழவேண்டும். விழாவிட்டால் ஆட்டத்தை இழப்பார். துணிப்பந்து தரையில் விழுவதற்கு முன்பு எதிரணியினர் பிடித்துவிட்டாலும் ஆட்டம் பறிபோகும். அத்துடன் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம்.
பாடல்
தொகுகுதிரை ஏறியவரும், குதிரையானவரும் மாறி மாறி உரையாடும் பாடல் பாடுவர்.
குதிரையானவர் | சவாரி செய்பவர் |
---|---|
உழுதாயிற்றா | உழுதாயிற்று |
காணம் விதைத்தாயிற்றா | விதைத்தாயிற்று |
காணம் வளர்ந்தாயிற்றா | வளர்ந்தாயிற்று |
காணம் அறுத்தாயிற்றா | அறுத்தாயிற்று |
காணம் அடித்தாயிற்றா | அடித்தாயிற்று |
காணம் வெந்தாயிற்றா | வெந்தாயிற்று |
காணம் குதிரைக்கு வைத்தாயிற்றா | வைத்தாயிற்று |
குதிரையானவர் எழுந்துவிடுவார். சவாரி முடிந்துவிடும். அடுத்த ஆட்டம் தொடரும்.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954