குதிரைக் கல்லு

குதிரைக் கல்லு ஒரு சிறுவர் விளையாட்டு. ஒருவகையில் இது குதிரைச் சில்லி விளையாட்டு போன்றது.

குதிரைச் சில்லி இருவர் ஆடும் விளையாட்டு. குதிரைக் கல்லு இரண்டு அணியினர் விளையாடும் விளையாட்டு.

குதிக்காலால் திருகி ஒரு சிறிய குழி செய்து அதனை உத்திக் குழி என்பர். சுமார் 15 ஆடி தொலைவில் ஒரு உத்திக்கோடு போடுவர். அந்த உத்திக்கோட்டிலிருந்து ஒவ்வொரு அணியிலிருந்தும் மூவர் முன்வந்து சில்லுக்கல்லைக் குழியில் விழுமாறு எறிவர். எந்த அணியினரின் சில்லுக்கல் குழியில் விழுகிறதோ, அல்லது குழிக்கு அருகாமையில் விழுந்து கிடக்கிறதோ அந்த அணியினர் அனைவரும் அடுத்த அணியினர்மீது குதிரை ஏறி சிறிது நேரம் நட்டகச்செய்து திளைக்கலாம்.

இந்த வகையில் இது ஒரு குறி-விளையாட்டு.

மேலும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைக்_கல்லு&oldid=972605" இலிருந்து மீள்விக்கப்பட்டது