குதிரைத் தறியனார்

குதிரைத்தறியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] குதிரைத்தறி என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் இவர். குதிரை கட்டுமிடமாக இருந்த ஓர் இடம் நாளடைவில் ஊராக மாறிக் குதிரைத்தறி என்னும் பெயர் கொண்ட ஊராயிற்று. குதிரைத்தறியனாரின் பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 296 எண்ணுள்ள பாடல்.

நற்றிணை 296 சொல்லும் செய்தி

தொகு

கொன்றைப் பூ மலரும் மாரிக் காலத்திலும் அவர் வரவில்லையே என்று தலைமகள் நொந்துகொள்ளும் செய்தியைத் தரும் பாடல் இது. பிரிந்தோர் இரங்கும் காலத்திலும் வினையையே நினைக்கிறாரே என்று அவள் நினைந்து வருந்துகிறாள்.

உவமை

தொகு

போருக்குச் செல்லும் யானையின் முகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஓடை என்னும் பொன்னணி போல, மாலை வளையம் போல மலர்திருக்கும் வேங்கைப் பூ, கற்பாறையின் மேல் தொங்கியதாம். யானை போல் கரும்பாறை. யானையின் பொன்னோடை போல் வேங்கைப் பூவின் சரம்.

தொல்காப்பியர் கருத்து

தொகு

'வினையே ஆடவர்க்கு உயிரே' என்று தொல்காப்பியம் கூறும் வாழ்க்கை நெறியை இந்தத் தலைவன் கடைப்பிடிப்பதை நினைவுகூரலாம்.

தொல்காப்பிய உரிச்சொல்

தொகு

ஏ என்னும் உரிச்சொல் பெற்று என்னும் பொருளைத் தரும் என்று தொலகாப்பியம் கூறுகிறது. (778) பெற்று என்றால் பெருமை என்று பொருள்.

இப்பாடல் 'ஏகல்' என்று மலையிலுள்ள பெரிய பாறாங்கல்லைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் காலத் தமிழுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 85.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைத்_தறியனார்&oldid=4121531" இலிருந்து மீள்விக்கப்பட்டது