குன்னூர் தொடருந்து நிலையம்

குன்னூர் தொடருந்து நிலையம் (Coonoor railway station, நிலையக் குறியீடு:ONR) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான குன்னூரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின், ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். இந்த தொடருந்து நிலையம் உதகமண்டலத்திற்கு செல்லும் தொடருந்துகள் நின்று செல்லும் முதன்மையான நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தைச் சேர்ந்தது.

குன்னூர்
தொடருந்து நிலையம்
குன்னூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்11°24′19″N 76°41′46″E / 11.4053°N 76.6962°E / 11.4053; 76.6962
ஏற்றம்1,719 மீட்டர்கள் (5,640 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
நடைமேடை2
இணைப்புக்கள்பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுONR
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1908; 116 ஆண்டுகளுக்கு முன்னர் (1908)
அமைவிடம்
குன்னூர் is located in தமிழ் நாடு
குன்னூர்
குன்னூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
குன்னூர் is located in இந்தியா
குன்னூர்
குன்னூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, குன்னூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 6.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13][14]


தொடருந்துகள்

தொகு
வரிசை
எண்.
தொடருந்து எண்: புறப்படும் இடம் சேரும் இடம் தொடருந்து பெயர்
1. 56136/56137 மேட்டுப்பாளையம் உதகமண்டலம் பயணிகள் வண்டி
2. 56140/56141 உதகமண்டல்ம் குன்னூர் பயணிகள் வண்டி
3. 56142/56143 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் வண்டி
4. 56138/56139 குன்னூர் உதகமண்டலம் பயணிகள் வண்டி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "குன்னூர்-ஊட்டி இடையே சொகுசு பெட்டியுடன் மலை ரயில் இயக்கம்". Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12. தினகரன் (நவம்பர் 26, 2019)
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  6. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  7. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  8. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  9. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
  10. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
  11. https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
  12. https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
  13. https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
  14. https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-nilgiris/renovation-of-railway-stations-under-amrit-bharat-project/3555958

வெளி இணைப்புகள்

தொகு