குன்றல் பகுப்பு தோற்றம் மற்றும் செயற்பாடு
ஒடுக்கற்பிரிவின் தோற்றமும் செயல்பாடும் (Origin and function of meiosis) குன்றல் பகுப்பின் தோற்றம் மற்றும் செயல்பாடு என்பது மேம்பாடடைந்த உட்கரு கொண்ட (ஊக்கேரியாட்டுகள்) உயிரிகளில் இனப்பெருக்கத்தின் பரிணாம வளர்ச்சி சார்ந்த அடிப்படை புரிதலை உண்டாக்குவதாக உள்ளது. உயிரியலாளர்கள் மத்தியில் இந்த நிகழ்வு ஊக்கேரியாட்டுகளின் பாலின கலப்பு பரிணாமத்தில் எத்தகைய பங்காற்றுகின்றன, இது ஏன் தொடர்கிறது, இது ஏன் இருமயமாக இனப்பெருக்கத்தின் இறுதியில் உள்ளது , என்ற உள்ளீடுகள் மூலம் இது 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை உறுதியாகக்கூற முடிகிறது. ஆரம்பகாலம் தொட்டே பெருக்கத்தில் ஈடுபட்டு வந்த தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் இதுநாள் வரை பாலினப்பெருக்க உயிரிகளாகவே உள்ளன.