குப்பைக் கோழியார்

குப்பைக் கோழியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாடல் தொடரால் பெயர்பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கத்தொகைப் பாடல்களில் இடம் பொற்றுள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 305.

  • குப்பைக் கோழித் தனிப்போர் போல
குப்பைக்கோழி தனிப்போர்

இந்த அடியில் அமைந்துள்ள தொடரைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறுந்தொகை 305 சொல்லும் செய்தி தொகு

ஊடல் முடிவுக்கு வரத் தலைவன் அல்லது தலைவி விட்டுக்கொடுத்தாக வேண்டும். பிறர் தலையிட்டுத் தீர்த்துவைக்க முடியாது.

உவமை தொகு

குப்பையில் கோழிகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டால் அதனை விலக்குவார் யார்? தாமே சண்டையை நிறுத்திக்கொண்டால்தான் உண்டு. அது போல ஊடல் சண்டையில் நாமே விட்டுக்கொடுத்தால்தான் உண்டு.

இது தலைவி கண்ட தெளிவு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பைக்_கோழியார்&oldid=2717992" இலிருந்து மீள்விக்கப்பட்டது