குப்ரி
குப்ரி (Kufri) என்பது இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கோடை வாசத்தலம் ஆகும். இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 7510 அடி உயரத்தில் உள்ளது.
பிரித்தானியர் ஆட்சிக்கு முன்னர் நேபாள மன்னர் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இப்பகுதி. குப்ரி என்றால் ஏரி எனப் பொருள் ஆகும். குப்ரி தேசிய நெடுஞ்சாலை 22 இல் சிம்லா தலைநகரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரிய விலங்குகள், பறவைகள் கொண்ட ஒரு விலங்கு காட்சிச் சாலையும் உல்லாசப் பூங்காவும் குப்ரி மலையில் உள்ளன.