குமரகுருபரர் சரித்திரம்

குமரகுருபரரைப் பற்றி மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய காப்பியம்

குமரகுருபரர் சரித்திரம் என்னும் இந்த நூல் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட காப்பியம். [1] இதில் 338 பாடல்கள் உள்ளன. இவை புராணம் போல எழுதப்பட்டுள்ளன. இதனை எழுதச் செய்தவர் காசி மடத்தின் இராமலிங்கத் தம்பிரான். [2] இவர் இதனை எழுதச் செய்தது பற்றிச் சாமிநாதையர் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் வரலாற்றில் இந்த இந்தப் பகுதிகளை இவ்வாறு பாட வேண்டும் என்று தம்பிரான் குறிப்பிட்டார். பிள்ளை அவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், மறுத்தற்கு அஞ்சி அவர் கூறியவாறே பாடியுள்ளார். அவற்றுள் குமரகுருபரரின் இளமைக்காலம், செந்தூர் முருகன் குமரகுருபரர்க்கு அருள் வழங்கியது ஆகிய பகுதிகள் சிறப்பாக அமைந்துள்ள, என்கிறார்.

பாடல் எடுத்துக்காட்டு

தொகு

சாலெலாம் வெண்தரளம் தளையெலாம் செஞ்சாலி
காலெலாம் கருங்குவளை காவெலாம் கனிச்சாறு
பாலெலாம் கழைக்கரும்பு பாங்கெலாம் மிகத்திருந்தி
நூலெலாம் நனிவிதந்து நுவல்வளத்த(து) அந்நாடு

ஆய்தபுகழ் போர்வையுடை அத்திருநாட் டினுக்கழகு
தோய்ந்ததிரு குகமென்னத் துலங்குநகர் உன்றுளதால்
ஏய்ந்தபெரும் சைவர்குழாம் திருக்கயிலை என்றிசைப்ப
வாய்ந்த வைணவர்கள் தம் திரு வைகுண்டம் எனும் நகரம்

இலையமல் குமரவேள்முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை அடுபகை சற்றேனும் இலை அடு பிணி நிரப்பும்
இலை அளற்று உழன்று வீழ்தல் இலை பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்து எடுத்து உதவல் கண்டார்

மேற்கோள்

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு பாகம் 1, தி பார்க்கர் அச்சகம், முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு மார்கழி 2005 - பக்கம் 51
  2. 14 ஆம் பட்டம் பெற்றவர்