குமார சுவாமி கோயில், பெங்களூர்

பெங்களூர் உள்ள முருகன் கோயில்

குமார சுவாமி கோவில் என்பது தென்னிந்தியாவின், கருநாடக மாநிலம், பெங்களூரின், அனுமந்தநகரில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும். இது சுப்ரமணியர் அல்லது முருகன் என்று அழைக்கப்படும் குமார சுவாமிக்கு எழுப்பப்பட்டுள்ள கோயிலாகும்.[1]

குமார சுவாமி கோவில்
Kumara Swamy Devasthana
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கர்நாடகம்
மாவட்டம்:பெங்களூர்
அமைவு:பெங்களூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:குமரன்
குமார சுவாமி கோயிலில் உள்ள கோபுரம்
இந்தியாவின் பெங்களூரில் உள்ள குமார சுவாமி கோவிலில் உயர்ந்த கோபுரம்

கோவில் தொகு

ஜாய் மாலை என்று அழைக்கப்படும் ஒரு மென்மையான மலையின் உச்சியில், நடைபாதைகள் மற்றும் உச்சிக்குச் செல்லம் படிக்கட்டுகளுடன் கோயில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் கோயில் அமைந்துள்ளது. "சுப்பராய (சுப்ரமணிய) சஷ்டி"யின் போது கோயிலில் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. சன்னிதியில் குமார சுவாமியை ஒட்டி, சிவலிங்கம், அமர்ந்த கோலத்தில் விநாயகர் மற்றும் பார்வதி தேவி உள்ளனர். இந்த சன்னதியை ஒட்டிய தனி சன்னதியில், அதே மண்டபத்தில், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு பெரிய திறந்த மண்டபத்திற்கு முன் நுழைவாயிலில் உள்ள கோபுரமானது, பிரதான சன்னதியை உள்ளடக்கிய மண்டபத்திற்கு முன் அமைந்துள்ளது. அதில் சிவபெருமானுக்கு குருவாக உள்ள கோலம் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலையைப் போலவே உள்ளது. சுவாமிமலை என்பது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆறு புனித தலங்களில் (அறுபடை வீடுகள்) ஒன்றாகும். மேலும் சுவாமிமலையில் தான் குமாரசுவாமி தன் தந்தையான சிவபெருமானுக்கு குருவானார்.

முதலில் கருவறையில் பஞ்சலோக சிலை இருந்தது (இப்போது காணப்பட்டு வழிபடப்படும் கருங்கல் சிலை பிற்காலத்தில் உருவானது). இந்த மூலப் பஞ்சலோக சிலை இப்போது கருவறையை உள்ளடக்கிய மண்டபத்திற்கு முந்தைய மண்டபத்தில் தனித்தனியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பஞ்ச முகி விநாயகர் கோவில் தொகு

மலையின் அடிவாரத்தில் பஞ்ச முகி விநாயகர் கோவில் உள்ளது. இந்த நவீன கோவிலில் ஐந்து தலைகள் கொண்ட விநாயகர் சிலை உள்ளது. எனவே இது பஞ்ச முகி விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. அவரது வாகனமானது வழக்கமான மூசிக வாகனத்திலிருந்து வேறுபட்டதாக சிம்ம வாகனத்தில் உள்ளார். மனதைக் கெடுக்கும் எதிர்மறை மற்றும் தவறான அகங்காரத்தின் தொடர்ச்சியான மேலாதிக்க இருப்பு சிங்கமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் விநாயகப்பெருமான், அவருடைய இந்த வடிவத்தில், அத்தகைய மனதை வெல்ல வழிபடுகிறார். அவருடைய (வக்ரதுண்ட மகாகணபதி என்ற பெயருக்கு இணையான) இந்த வடிவம் வழிபடப்படுகிறது.

சங்கடார சதுர்தசி அன்று சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. விநாயகப் பெருமானின் வழிபாடு பழங்கால கணபதி முறைப்படி செய்யப்படுகிறது. பெங்களூரில் இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றும் ஒரு சில கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. கோயிலின் எதிர்புறத்தில் நவரச சன்னதியும், அதை ஒட்டி ஆஞ்சனேயர் சிலையும் அமைந்துள்ளது.

இதர வசதிகள் தொகு

மலையடிவாரத்திற்கும் உச்சிக்கும் நடுவே, நாராயண பரம புருஷ பகவான் மகா விஷ்ணு, ஸ்ரீமன் நாராயணனை அவரது புனிதப் படுக்கையாகக் கொண்ட ஆதி சேசனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சன்னதி உள்ளது.

குமார சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் மற்றொரு சிறிய பாறைக் குன்று உள்ளது. இதன் மேல், பெங்களூர் குடிநீர் வழங்கல் துறையினால் கட்டப்பட்ட ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தெளிவான நாளில், மலையின் உச்சியில் இருந்து பெங்களூரின் பரந்த காட்சிகள் காணக் கிடைக்கும்.

குறிப்புகள் தொகு

  1. "Sri Kumaraswamy Temple - Hanumanthanagar". Book online Pujas, Homam, Sevas, Purohits, Astro services| Pure Prayer (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.

வெளி இணைப்புகள் தொகு